திங்கள், 29 ஜூலை, 2013

பயணங்களின் பதிவுகள் [ சவுத் ஆப்ரிக்கா 9}

     நைஸ்னா அழகிய சிறிய ஊர்(place of wood)...எங்கு பார்த்தாலும் பைன் மரங்கள் ..மரங்களின் ஊடே ஆங்காங்கே வீடுகளும் தங்கும் அறைகளும் உள்ளது.மர சாமான்கள் தயாரிப்பது தான் அங்கு முக்கிய தொழில்.அங்கு உள்ள யானைகள் சரணாலயம் போனோம்.உள்ளே செல்வதற்கு  முன் எல்லோரும் யானைக்கு 250 ருபாய் கொடுத்து சின்ன பக்கெட்டில் பழங்களை வாங்கி கொள்கிறார்கள் ,ஆப்ரிக்கா யானை நம்மூர் யானை போல் இல்லாமல் சாம்பல் நிறத்தில் பார்பதற்கு சிலை போலவே இருக்கிறது ..அதன் காதுகள் ஆப்ரிக்கா நாட்டின் மேப் போலவே இருக்கும் என்றார் எங்க கைடு ..வாங்கி வந்த பழங்களை எல்லோரும் யானைகளுக்கு கொடுத்தோம்..யானைகளும் அவற்றை ஆவலோடு தின்கின்றன ,அவற்றின் அருகில் நின்று புகைப்படம் எடுத்து கொண்டோம்.யானை தந்ததால் ஆனா பியானோ ,மற்றும் பல பொருட்களை கண்காட்சியாக வைத்து இருகிறார்கள் ...அதை பார்த்து விட்டு அடுத்து டிசிகாமா காடு  சென்றோம் ..நைசஸ்னா மற்றும் டிசிகாமா இரண்டு ஊர்களும்  இணைபில்லாமல் தனி தனியாக இருந்தது  அதன் மேல் ஒரு பாலம் போட்டதும் தான்  இரு ஊர்களும் இணைந்தனவாம் ...டிசிகாமா காட்டில் 1000 வருடத்து மரம் இருக்கிறது ...அதை ஒரு சுற்றுலா தளமாக்கி உள்ளனர்..அடர்ந்து பரந்து விரிந்துள்ள அந்த மரம் பார்க்க வியப்பாக உள்ளது ..இங்கு பைன் மரங்களை  அரசாங்கத்துடன் ஒப்பந்தம் போட்டு தனியார் வளர்கின்றனர் ..காட்டினுள் மரத்தினால் ஆன தாங்கும் அறைகள் அமைத்துள்ளனர் ...காட்டினுள் தங்கி இருந்தது புது விதமான அனுபவமாக இருந்தது ,,,,









தொடரும்...........

சனி, 20 ஜூலை, 2013

பயணங்களின் பதிவுகள் [ சவுத் ஆப்ரிக்கா 8}

இன்று அவுட்ஷ்ரோமில் உள்ள ஆஸ்ட்ரீச்(நெருப்புகோழி ) பண்ணைக்கு சென்றோம்.அதன் முட்டை ஓடு மிக பலமாக இருக்கிறது அதன் மேல் ஏறி நின்றாலும் அது உடைவதில்லை ..முன்பெல்லாம் அதன் இறகுகள் தங்கத்திற்கு இணையாக விற்பனை ஆகியதாம்..வெள்ளையர்கள் அதை அணிவதில் மிக பெருமை கொண்டார்களாம்..உலக போருக்கு பின் ஏற்பட்ட பணப் பற்றாக்குறையால் இறகு வாங்குவதை நிறுத்தியதால் அந்த தொழில் நசிந்து விட்டதாம் .. அடுத்ததாக காங்கோ கேவ்ஸ் சென்றோம்..மிக பிரமாண்டமாய் இருக்கிறது , 2000 ஆண்டுகளாக தன்னால் உருவான அந்த குகையை அழகாக அலங்காரபடுத்தி உள்ளனர்..உள்ளே செல்ல ஒருவருக்கு 540 ரூபாய் வசூல் செய்கின்றனர் ஒவ்வொரு குரூப் ஆட்களுக்கும் ஒரு கைடு வந்து அழகாய் விளக்கம் அளிக்கிறார்.பொறுமையாகவும் அன்பாகவும் பேசுகின்றனர் ..டிப்ஸ் கொடுத்தாலும் மறுத்து விடுகின்றனர் ..குகையின் உள்ளே சிறிது தூரம் மட்டுமே செல்ல முடிகிறது அதன் பிறகு உள்ள இடங்களில்  ரிஸ்க் எடுப்பவர்கள் மட்டுமே செல்லலாம்  என்பதால் நாங்கள் செல்லவில்லை ..ஆங்காங்கே மின் விளக்கின் ஒளியில் அந்த குகை பார்ப்பதற்கு ஆங்கில படங்களில் புதையல் தேடி செல்லும் இடம் போல் இருக்கிறது ...மூச்சு விட சிறிது சிரமமாக உள்ளது ..அங்கிருந்து ஜார்ஜ் சென்றோம் மிக அழகான ஊர் மலை அதன் அருகில் கடல் அதை ஒட்டியே வீடுகள் அங்கு வசிபவர்கள் மிக அதிர்ஷ்டசாலிகள் இயற்கையின் அழகை எல்லாம் ஒருசேர அனுபவிக்கிறார்கள்  ...ஜார்ஜ் பென்னிட் என்பவர் தனது அழகான மனைவியை காதலனிடம் இருந்து பிரித்து சிறை வைக்க 1850 ல் கண்டுபிடித்த அழகிய இடம் ..மனைவியை காண வந்த அவனது தலையை வெட்டி விட்டதாகவும் அவனது ஆவி இன்றும் தலை இல்லாமல் இப்போதும் அங்கே சுற்றுவதாகவும் நம்புகின்றனர்.....












தொடரும்.....

ஞாயிறு, 14 ஜூலை, 2013

பயணங்களின் பதிவுகள் [ சவுத் ஆப்ரிக்கா 7}

பயணங்களின் பதிவுகள் [ சவுத் ஆப்ரிக்கா 7}

       இரண்டாம் உலக போருக்குப் பின்  கேப் டவுனில் மக்கள் தொகை அதிகமாகி  இட பற்றாகுறை ஏற்பட்டதால் 196ஏக்கர் அளவில் கடல் நீரை பின்னுக்கு தள்ளி நிலமாக்கி உள்ளனர்.கேப் டவுனில் இருந்து வோர்செஸ்டேர் என்னும் செல்லும் பாதையை இரு வழியாக பிரித்து உள்ளனர், மலையை சுற்றி இயற்கையை ரசித்து கொண்டே செல்ல ஒரு பாதையும்,மலையை குடைந்து நாலு கிலோமீட்டர் தூரத்திற்கு சுரங்க பாதையும் அமைத்துள்ளனர் நாங்கள் சுரங்க பாதையில் பயணித்தோம் பாதை  முழுக்க வெளிச்சமும் ஆபத்து நேரத்தில் தப்பிக்க அவசர வழியும் ஏற்படுத்தி உள்ளனர்  ,.வழி எங்கும் ஒயின் தயாரிக்கும் இடங்கள் உள்ளது ..எல்லோருக்கும் இலவசமாக ருசிப்பதற்க்கு கொடுகிறார்கள்..அடுத்து கேப் பாயிண்ட் என்னும் இடம் சென்றோம் ..வரலாறு பாடத்தில் நாம் படித்த வாஸ்கோடகாமா என்னும் போர்த்துகீசிய மாலுமி கண்டுபிடித்த நன்னம்பிக்கை முனை என்னும் இடம் இது தான்..இந்தியாவை கண்டறிய வந்த அவருக்குஇந்த முனை  நம்பிக்கையை ஏற்படுத்தியதால் இந்த பெயர் வந்தது.. பழங்கால கல் படிகட்டுகள்,கலங்கரை விளக்கம்,மூன்று பக்கமும் கடல் என அழகோடு மிளிர்கிறது நன்னம்பிக்கை முனை..அடுத்து நாங்கள்  காங்கோ வைல்ட் லைப் ரேஞ்சு போனோம்.ஆப்ரிக்கா நாட்டில் மட்டுமே காணப்படும் அரிய வகை மிக கொடுமையான விஷம் கொண்ட பாம்புகள் பார்வைக்கு வைக்கபட்டுள்ளன, வெள்ளை சிங்கம்,புலி,சிறுத்தை வகைகள் உள்ளன.அடுத்து ஆஸ்ட்ரிச் தலைநகரம் என அழைக்கப்படும் "அவுட்ஷர்ம்"   என்னும் இடத்திற்கு சென்றோம் சுற்றிலும் மலைகள் சூழ்ந்த இடம் ஆகையால் குளிர் மிக அதிகமாக உள்ளது..வெள்ளைகார பெண்மணிகள் சமையல் செய்கிறார்கள் கறுப்பர் இன மக்கள் மற்ற வேலைகளை செய்கிறார்கள்.பீப்,செம்மறி ஆடு,தான் முக்கிய உணவு ,சிக்கன் கறியும் பச்சையாக இருக்கிறது.பிரட் மற்றும் பழம் மட்டுமே பல நேரங்களில் எங்களது உணவாக இருந்தது ...நன்றாக உண்ணும் பழக்கம் உள்ள எங்களுக்கு உணவு பெரும் பிரச்சனையாக இருந்தது ........











தொடரும்.

வியாழன், 4 ஜூலை, 2013

பயணங்களின் பதிவுகள் [ சவுத் ஆப்ரிக்கா 6}

பயணங்களின் பதிவுகள் [ சவுத் ஆப்ரிக்கா 6}

டேபிள் மௌன்டைன் மேல் இருந்து பார்க்கும் போது திரு.நெல்சன் மண்டேலா அவர்கள் சிறை வைக்கப்பட்டு இருந்த ராபின் தீவை பார்க்கலாம் ..அங்கிருந்து சென்று பார்லிமென்ட் பார்த்தோம்.டச்சுகாரர்கள் கம்பெனி வைத்திருந்த போது உருவாக்கிய கார்டன் தற்போது  கம்பெனி கார்டன் என அழைக்கப்பட்டு இன்றும் பல வகையான பழமைமிக்க மர,செடி வகைகளுடன் பராமரிக்கபடுகிறது.1968 ல் டச்சுகாரர்கள் காலத்தில் இந்தியா மற்றும் மலேஷியாவில் இருந்து குடியேறியவர்கள் கட்டிய வீடுகள் இன்றும் பாதுகாக்கபடுகிறது ..அவர்களின் முதல் துறைமுகமாகிய   castle of good hope பார்த்தோம் ..அங்கே ஆங்கிலேயர்கள், டச்சு,மற்றும் அவர்களை ஆண்டவர்கள் ஏற்றிய கொடி கம்பங்கள் மட்டும் இருக்கிறது ..1994 இல் திரு.நெல்சன் மண்டேலா அவர்கள் ஏற்றிய அந்நாட்டின்  புதிய கொடி பறக்கிறது..அங்கிருந்து houtbay என்னும் இடத்திற்கு போனோம் மூன்று பக்கமும் மலைகள் நடுவில் கடலும் இதுவரை பார்த்திராத வகையில் மனதை கொள்ளை கொள்ளும் அழகுடன் மனதை மயக்குகிறது.hout என்பது வுட் என்னும் அர்த்தம் .தேக்கு மரங்கள் நிறைந்துள்ள இடம் என்பதால் அந்த பெயர் வைத்துள்ளனர்...அங்கிருந்து அடுத்து boulders பீச் சென்றோம்,ஆப்பிரிக்காவில் வேறெங்கும் காண முடியாத .அண்டார்டிகா வில் இருந்து இங்கு பரவிய பென்குயின் இங்குள்ள கடற்கரையின் ஒரு பகுதியில் பரவி இருக்கிறது ..அங்கிருந்து கார்டன் ரூட் என்னும் வழயில் பயணக் செய்தோம் பெயருக்கு ஏற்றார் போல் அவ்வளவு அழகான பாதை, பயணத்தில் ஒரு சலிப்பான நேரம் கூட வருவது இல்லை ..தோட்டங்களும் பசுமையான மலை முகடுகளும் ,சில்லென்ற சீதோஷனமும் ஐநூறு கிலோ மீட்டர் பயணம் செய்ததே தெரியாமல் கடந்து வந்தோம்...அழகாய் கோட் போட்டு கொண்டு நம் கார் அருகில் வரும் பிச்சைகாரர்கள் குட்மார்னிங் சொல்லி உடனே நகர்ந்து சென்று விடுகின்றனர் ....நாம் விரும்பினால் அழைத்து கொடுக்கலாம்...மலைசரிவு ஏற்ப்படாமல் இருக்க மலைப்பாதையில் தூண்கள் அமைத்து அரண் அமைத்து உள்ளனர் ...மக்கள் பாதுகாப்பில் மிக அதிக அக்கறை கொண்டுள்ளனர்...டோல்கேட்டில் பண பரிவர்த்தனை கிடையாது எல்லோரும் கார்டு தேய்த்து கொண்டு போக வேண்டும்...