வெள்ளி, 1 ஜூலை, 2011

.காத்திருக்கிறேன் .........

காத்திருக்க சொல்கிறாய்
காலம் கடக்கின்றது
நானும் காத்திருக்கிறேன்
கல்லாகி நிற்கிறாய் நீ
காலம் உன்னை கரைக்கவில்லை......
உன் நினைவினில்
கற்பூரமாய் கரைகிறேன் நான் .....
என்றோ ஒருநாள் நீ என்னை தேடி வருகையில்
காற்றினில் கரைந்திருப்பேன் நான்
ஆனாலும் உன்னோடு
என் வாசம் மட்டும் மிச்சமாய் ................

24 கருத்துகள்:

  1. //என்றோ ஒருநாள் நீ என்னை தேடி வருகையில்
    காற்றினில் கரைந்திருப்பேன் நான்
    ஆனாலும் உன்னோடு
    என் வாசம் மட்டும் மிச்சமாய்//

    Nice wordings.....

    பதிலளிநீக்கு
  2. காத்திருந்த மல்லி மல்லி பூத்திருக்கு சொல்லி சொல்லி

    பதிலளிநீக்கு
  3. டைட்டிலேலேயே கதையை சொல்லி விடும் ஆற்றல் எல்லோருக்கும் வருவதில்லை.. கவிதையிலேயே மனதை ,காதலை கரைத்தி விடும் பாங்கும் அப்படியே வெல்டன் மேடம்

    பதிலளிநீக்கு
  4. >>ஆனாலும் உன்னோடு
    என் வாசம் மட்டும் மிச்சமாய் ...

    நெஞ்சம் தொட்ட வரிகள்

    பதிலளிநீக்கு
  5. unmai...unmai....kaathiruthalin valigal...varigalil unarthiyathu unmai....miga nanru...vaalthukkal suja...

    பதிலளிநீக்கு
  6. /உன் நினைவினில்
    கற்பூரமாய் கரைகிறேன் நான் ...../
    அருமை வரிகள்

    பதிலளிநீக்கு
  7. அகலிகன்

    அருமை, வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  8. காத்திருப்பில் உள்ள சுகம் நெஞ்சைத் தொடுகிறது

    பதிலளிநீக்கு
  9. காத்திருப்பது சுகம் அல்ல...
    அது வேதனை..
    அதை நானும் அறிவேன்...

    பதிலளிநீக்கு
  10. காதலின் தவிப்பை சொல்லும் அழகிய கவிதை...

    பதிலளிநீக்கு
  11. கரைய வைக்கும் வரிகள் /./

    பதிலளிநீக்கு
  12. பெண் கவிகள் ஏன் ஆண்களைச் சாடுவதையே பெரும்பாலும் பாடு பொருளாய்க் கொள்கின்றீர்கள்? -என்று தங்களை வினவ எண்ணுவேன், ஆனால், இக்கவிதை பாற்பகுப்பைக் கடந்து இருபாலருக்கும் பொதுவில் விளங்குகிறது... அருமை...

    பதிலளிநீக்கு
  13. நன்றி விஜய் .....ஆண்கள் கோபபடுத்தும் மட்டும் தான் சாடுவோம் ....மற்ற நேரத்தில் இல்லை விஜய் சார் ......

    பதிலளிநீக்கு