அலுவலகம் செல்லும்
கணவனின் கழுத்தில் தொங்குகிறது
தான் இன்னாரென்று அறிவிக்கும்
அடையாள அட்டை .....
பள்ளி செல்லும் பிள்ளையின்
கழுத்தினில் அவன் யாரென்று
கூறும் அடையாள அட்டை .....
மழலையர் வகுப்பினில் தவழும்
குழந்தையின் கழுத்திலும் அவளைப் பற்றி
தகவல்களை பற்றிய அடையாள அட்டை ...
அவர்கள் வீட்டினில் கட்டி போடப்பட்டு இருக்கும்
நாயின் கழுத்தினிலும் ஓர் அடையாள அட்டை
அதனை பற்றிய விவரங்களோடு .....
அவரகளுக்காகவே நாள்முழுக்க பாடுபட்டு
அவர்களை எல்லாம் அன்போடு
பாதுகாக்கும் அந்த வீட்டு பெண்ணிடம் மட்டும்
எந்த வித அடையாளமுமில்லை
தானென்ற அடையாளம் தொலைத்தவள் அவள் .....
Good One Suja. Keep going.
பதிலளிநீக்குமேலோட்டமாக பார்க்கும்போது சரியென்றும் தோன்றினாலும் உண்மையில் அப்படியில்லையென தோன்றுகிறது.
பதிலளிநீக்குஅடையாள அட்டைத்தான் கரு என்றால், தற்போது இருவர் சம்பளம் இருந்தால்தான் ஓரளவு நிம்மதி என்ற சூழ்நிலை, ஆக அவளும் அந்த அட்டையை சுமந்து தொலைக்கிறாள்
>>தானென்ற அடையாளம் தொலைத்தவள் அவள் ....
பதிலளிநீக்குஅதனால்தான் பெண்கள் தியாகிகள்
செம டெலண்ட் ஆகிட்டீங்க. ஒரு ஸ்பெல்லிங்க் மிஸ்டேக், கிராம்ர் மிஸ்டேக் கூட இல்லையே? வாவ்
பதிலளிநீக்குஅருமை..
பதிலளிநீக்குWow... well written...
பதிலளிநீக்குசூப்பர்...
பதிலளிநீக்குFine
பதிலளிநீக்குஇன்றைய வலைச்சரத்தில் தங்களை
பதிலளிநீக்குஅறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்
அதனுடன் இதையும் சேர்த்துக் கொள் தோழி
பதிலளிநீக்குதான் என்ற அடையாத்தை
தொலைத்துவிட்டு தாங்கி நிற்கிறாள்
அவள் வீடுதனை பன்முகத்துடன்
பிள்ளைக்கு தாயாய்
கணவனக்கு மனைவியாய்
மாமியாருக்கு மகளாய்
என்றாலும்
தன் அடையாத்தை தொலைத்துவிட்டு ......
தானென்ற அடையாளம் தொலைத்தவள் அவள் .....
பதிலளிநீக்குபாராட்டுக்கள்...
வாழ்த்துக்கள்..
thaan endra adaiyaalam tholaithaal, aval kazhuthil thongum adayalaam ennavo.. adhuve pen thaatiyaga irupavalin adaiyalam..
பதிலளிநீக்குநல்ல கவிதை! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குதியாகங்களால்(சுயம் தொலைத்ததால்) தன்னைத்தானே அறிமுகபடுத்த அடையாள அட்டைஅவசியமற்று எல்லோர் மனதிலும் ஆழ பதிந்திருப்பவள் பெண் (இல்லத்தரசி).