திங்கள், 27 பிப்ரவரி, 2012

பறவையாய் இருந்த நான் ........

இணையாய் பறப்போமென்று இணைந்தோம்
திருமணத்தில் ....
பருந்தென நீ உயரும் போதெல்லாம்
ஊர்குருவியாய் வரையறுக்கப்பட்டது
என் எல்லைகள் ....
வெகு தூரங்களை நீ கடக்கும் போதெல்லாம்
அதில் பாதி தான் என் அளவென்றாய்....
சுதந்திரங்கள் என்பது உனக்கு மட்டும் சொந்தமாயின
என் கைகளுக்கு விலங்கிடப்பட்டு ....
நாட்கள் செல்ல செல்ல என் சிறகுகள் ஒவ்வொன்றாய்
பிடுங்கப்பட்டு நூல்களாய் கோர்க்கப்பட்டன....
நூல்கள் உன் கைகளில் சிறைபட்டு
பறவையாய் இருந்த நான் பட்டமானேன்....

5 கருத்துகள்:

  1. மிக மிக அருமையான சிந்தனைக் கவிதை.பெண்மையின் வலி உணர்த்துகிறது.

    பதிலளிநீக்கு
  2. >>நூல்கள் உன் கைகளில் சிறைபட்டு
    பறவையாய் இருந்த நான் பட்டமானேன்....

    வாவ்!! - இது கவிதைக்கு

    அவ்வ்வ் - இது உங்கள் நிலைக்கு

    பதிலளிநீக்கு
  3. பெண்மையின் வலி ....அருமை... http://www.rishvan.com

    பதிலளிநீக்கு
  4. பெண்மையின் வலி அருமை.....http://www.rishvan.com

    பதிலளிநீக்கு
  5. பட்டம் பறக்கதான்
    உயர உயர பறந்து செல்லுங்கள்
    பருந்து பார்க்கட்டும்

    பதிலளிநீக்கு