அதிகாலை வேளையில்
அலறி அழைத்த தொலைபேசியில் வந்தது
அன்பும் பாசமுமாய்
தோளில் தூக்கி வளர்த்த
மாமாவின் மரணசெய்தி ....
கணக்கிட்டது பல காரணங்களை
பணம் மட்டுமே பிரதானமென
மாறிவிட்ட பொருளாதார மனது...
பயணதூரம் கணக்கிடப்பட்டது முதலில்
தொலைவும் அதிகம் பணமும் விரயம்,
பிள்ளைகளின் படிப்பு பாழகுமோ ஒருநாள்?
எங்கள் வீட்டு துயரத்திற்கு
துக்கம் கேட்காமல் போனாரே!
அம்மாவும் தம்பியும் போனால் போதாதோ?
என்றெல்லாம் எண்ணமிட்டது மனது
இறுதியாய் முடிவெடுத்து
ஒரு ரூபாய் செலவழித்து
தொலைபேசியில் இரங்கல் தெரிவித்து
ஊரிலேயே இல்லை நான்
என்கிற ஒற்றை பொய்யுடன் முடிந்து போனது
மாமாவின் மரணசெய்தி.......
Sorry for your loss...:(
பதிலளிநீக்குகாலங்களும் நேரங்களும் இப்படித் தான் இருக்கின்றன.
பதிலளிநீக்குஇன்றைய யதார்த்தம் !! என்றாலும் எனக்குள்ளே எதுவோ உடைகிறது சுஜா...!!
பதிலளிநீக்குநிதர்சனம் சுடத்தான் செய்யும்.
அவசரகதியில் இயங்கும் உலகம்:((((
பதிலளிநீக்குசில மனிதர்கள் அப்படிதான் இருக்கிறார்கள்
பதிலளிநீக்குபொருளாதாரமா?
கொடுக்கல் வாங்கலா?
வரவா? செலவா?
அறிவு கணக்கு பார்க்கிறது
அன்பு காணாமல் போனது
தன் குடும்பம் தன்பிள்ளை இதுவே இப்போதைய நிலை
பதிலளிநீக்கு