திங்கள், 16 ஏப்ரல், 2012

அத்தையின் வீடு

தாண்டி போக மனமின்றி
அழகாய் வரவேற்கும்
அத்தை வீட்டு முற்றம்
காதுக்கினிய கொலுசொலியின் கூடவே
ஒத்து ஊதும் அத்தையின் மெட்டி சத்தம்
ஊதுபத்தியின் மணம் மனதினை மயக்கும்
வாய் நிறைய சிரிப்பின் ஊடே
வாடி என்றழைக்கும் பாசமிகு அத்தை
கட்டினாள் மாடி வீடு ...
இன்று உட்கார்ந்தாலே அழுக்காகி விடுமோ
புத்தம்புது சோபா என்று
முகம் சுளிக்கும் வரவேற்பு
கொலுசொலிக்கு பதிலாக வீட்டினுள்ளே
பணத்தின் செழிப்பை உணர்த்தும்
செருப்பினது சத்தம்
ஊதுபத்தி மணமில்லை ஆளுக்கொரு
விதமாய் பூசும் நறுமணத்தின் வாசம்
பாதி கண்கள் தொலைகாட்சியிலும்
பாதி புன்னகை உதட்டிலும் கொண்டு
வா என்று அழைக்கும் அத்தையின் வீடு
இன்று உடனே தாண்டி போக சொல்கிறது
உள் நுழைய மனமின்றி .......

4 கருத்துகள்:

  1. ம்...அன்று மாமா இன்று அத்தையா...!?

    உறவுகளை வைத்தே இன்றைய யதார்த்தத்தை நெத்தி அடியாக சொல்றீங்க...

    அருமை.

    பாராட்டுகள் சுஜா.

    பதிலளிநீக்கு
  2. நேர்த்தியான வரிகளில் இன்றைய அவலங்களை அழகாய் பதிவு செய்யும் விதம் சிறப்பு .
    கவிதைக்கு என் வாழ்த்துக்கள

    பதிலளிநீக்கு