செவ்வாய், 11 செப்டம்பர், 2012

ஜன்னலோர இருக்கை

என்றுமே வாய்ப்பதில்லை
பிரியமான ஜன்னலோர இருக்கை
இயற்க்கையின் அழகையும்
பின்னோக்கி ஓடும் மரங்களையும்
சில்லென்ற காற்றையும் தூர இருந்தே
ரசிக்க முடிகிறது எப்பொழுதும்
சிறுவயதினில் அண்ணனின் அடக்குமுறையால்
பின் தம்பியின் ஆசை என்று சொல்லி
வயது வந்த பின் ஆண்களின்
பார்வை பட கூடாதென்று சொல்லி
திருமணம் ஆனதும் கணவரின் சொல்படி
பின் பிள்ளைகளின் விருப்பமென
எப்பொழுதும் இழந்து கொண்டே இருக்கிறேன்
என் பிரியமான ஜன்னலோர பயணத்தை
என்னிடம் இருந்து பிடுங்கப்படும்
ஒவ்வொரு முறையும் பெயரிடப்படுகிறது
விட்டுகொடுத்தல் என்று..........

16 கருத்துகள்:

  1. பஸ் ஸ்டேண்டோ, ரயில்வேஸ்டேஷனோ முன் கூட்டியோ போய் இடம் பிடிக்கவும், லேட்டா போய்ட்டு ஹா ஹா

    பதிலளிநீக்கு
  2. உறவுகளுக்காக இழத்தல் சுகமென்றாலும், ஜன்னலோர இருக்கை இழத்தல் சற்று வருத்தத்திற்கு உரிய இழப்பே

    மிக அருமை

    வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  3. சன்னலோர இருக்கையை கேட்டும் வாங்குகையில் வலிக்கும் வலி இப்போ புரிகிறது ... கவிதை அருமை வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. மற்றவர்களுக்காக விட்டு கொடுப்பதில் இருக்கும் சந்தோஷமே தனிதானே, வருத்தப் படாதீங்க...!

    பதிலளிநீக்கு
  5. எல்லாம் கிடைத்து
    என்றோ ஒருநாள்
    ஏமாந்ததற்கா
    இந்த பட்டியல்

    பதிலளிநீக்கு
  6. ஜன்னலோர இருக்கையின் மகத்துவம் புரிந்தது.

    பதிலளிநீக்கு