வியாழன், 19 செப்டம்பர், 2013

சவுத் ஆப்ரிக்கா to சாம்பியா

சாம்பியா உலகின் மிக பெரிய நீர்வீழ்ச்சியான விக்டோரியா பால்ஸ் ஐ தன்னுளே வைத்து கொண்டு இருக்கும் ஒரு ஏழை நாடு ....ஜோன்ஸ்பெர்க் இல் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேசில் பயணித்து  இரண்டு மணி நேரத்தில் லிவிங்ஸ்டன் விமான நிலையம் சென்றடைதோம்..பதினெட்டு வயதுக்கு கீழ உள்ளவர்களுக்கு விசா எடுக்க வேண்டிய அவசியம் இல்லை அதனால் என் மகளுக்கு எடுக்கவில்லை...மகன் வர முடியாததால் நாங்கள் மூவர் மாட்டும் சென்றோம் ..ஏர்போர்ட் மிக சிறியதாக இருந்தது..அங்கிருந்து போகும் பாதையில் ஊர் மிகவும் காய்ந்து போய் ஒரு சுற்றுலா தளமாகவே தோன்றவில்லை..எங்கு பார்த்தாலும் ஏழை கறுப்பின மக்கள் தான் தென்பட்டனர்,அங்கிருந்து  சன் ஹோட்டல் சென்றோம்...சன் ஹோட்டலின் வாயிலில் கறுப்பின பழங்குடியினர் வரவேற்பு அளித்தனர்.. ஹோட்டல் மிக அழகாக அலங்காரம் செய்ய பட்டு வெளி உலகிற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லாமல் இருந்தது .சிறிது ஓய்வெடுத்து விட்டு பால்ல்ஸ் பார்க்க போனோம் ,அருவி ஆறாக ஓடி வரும் அழகினை பார்த்து விட்டு திரும்பி வந்து விட்டோம்...மிக ஆபத்து நிறைந்த இடம் ஆதலால் தனியாக செல்வது அபாயகரமானது ...மறுநாள் காலை எங்கள் கைடு வந்து எங்களை அழைத்து சென்றார் ,போகும் போது சாட்ஸ் மற்றும் ரப்பர் செருப்பு போட்டு கொண்டு வர சொன்னார் அவர் மழை கோட்கொண்டு வந்தார் ,அருவியை முதன்முதலில் வெளிஉலகிற்கு அறிமுகப்படுத்திய   டேவிட் லிவிங்ஸ்டன் பற்றி கூறினர் டேவிட் இந்த பகுதிக்கு வந்தபோது அதுவரை வெள்ளையர்களை பார்த்திராத கறுப்பின பழங்குடி மக்கள் அவரை பேய் என்று நினைதனராம் ,பிறகு அவருக்கு உணவளித்து அவர் உண்டதும் அவர் பேய் இல்லை என்று எண்ணினார்களாம்.பேய்கள் உணவு உண்ணாது என்பது அவர்கள் நம்பிக்கை.அவர்களுடன் நன்கு பழகிய அவர் தான் இந்த அருவியின் அழகினை வெளி உலகிற்கு தெரிவித்து உலகின் பார்வை இதன் மீது பட காரணமாக இருந்தவர் .  அவரது பெயரயே இந்த இடதிற்கு வைத்து விட்டனர். .அருவியின் முன்பக்கம் அழைத்து சென்றார் கைடு ..."ப்ப்ப்ப்ப்பா" வாழ்கையில் அழகு என்பதின் முழு அர்த்தம இன்று தான் பார்த்தோம் சொல்லில் வடிக்க  முடியாத அழகு ...அப்படிப்பட்ட அழகு ...நம் கண் முன்னே அருவி கண்ணுக்கெட்டும் தூரம் வரை கொட்டுகிறது ...மூன்று வானவில்கள் எப்போதும் தெரிகிறது ..நாம் மேலே இருந்து விழும் அருவியை கீழ் இருந்து அன்பவித்து ரசித்து இருப்போம் இது நம் கண் முன்னே கீழ விழுகிறது கீழே பட்டு தெறிக்கும் நீர் மேல் நோக்கி வந்து நம்மை நனைக்கிறது...பாசி படர்ந்த இரும்பு பாலத்தின் மேல் நடந்து செல்வது திகிலூட்டும் அனுபவமாக இருந்தது ..அந்த இடத்தை விட்டு வருவதற்கே மனது இல்லாமல் பிரிந்து வந்தோம் ....      










7 கருத்துகள்:

  1. பயண அனுபவங்கள் ரஸிக்கும்படியாக உள்ளன. கடைசி படத்தில் வானவில் மிகவும் அழகாக படமாக்கப்பட்டுள்ளது.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  2. >>> நான் சின்னப்பையனா இருந்தப்போ நயாகரான்னு படிச்ச நினைவு, ஓவர் டேக்கிடுச்சா?

    பதிலளிநீக்கு
  3. வானவில் போட்டோ மிக அழகு

    விஜய்

    பதிலளிநீக்கு
  4. நண்பர்கள் இந்த கட்டுரையை படிக்க கேட்டுக் கொள்கிறேன்.
    இயற்கை கொஞ்சுகிறது. நீர்வளம் - ஆஹா.
    நன்றி & வாழ்த்துகள் நண்பரே.

    பதிலளிநீக்கு
  5. இனிய பயணம் , புதிய மக்கள், அருமையான காட்சிகள்

    பதிலளிநீக்கு