பயணங்களின் பதிவுகள் ...(டெல்லி)
2010 மே மாதம் டெல்லி சுற்றுலா சென்றிருந்தோம் ....சென்னை வெயில் எவ்வளவோ பரவாயில்லை .டெல்லி வெயில் உடலை எரிய வைக்கிறது வெயிலுக்கு இதமாக எல்லா இடங்களிலும் எலுமிச்சை ஜூஸ் விற்கிறார்கள் ..அதை குடித்து கொண்டே சுற்றி வருவதால் வெயிலை தாங்க முடிந்தது ...முதலில் பிர்லா மந்திர் சென்றோம்..தொழில் அதிபர் பிர்லா அவர்களால் கட்டப்பட்ட லக்ஷ்மி நாராயணன் கோவில் அழகான வெண்மை நிறத்தில் படிகளும் உட்புற அலங்காரங்களும் அழகாக ஜொலிக்கிறது ..மகாத்மா காந்தி அவர்களால் முதல் பிரவேசம் செய்ய பட்டதாம் இந்த கோவில் ...அடுத்து பாராளுமன்றம் எப்போதும் தொலைகாட்சியில் பார்க்கும் அதை நேரில் பார்க்கும் பொழுது பரவசம் ஏற்பட்டது ...அடுத்து நேருவின் இல்லமாகிய தீன்மூர்த்தி பவன் சென்றோம் ..அவ்வளவு பெரிய மாளிகை இப்போது ஒரு அழகிய அருங்காட்சியகமாக இருக்கிறது ...இந்திராகாந்தி இல்லத்தில் அவர்கள் பயன்படுத்திய படுக்கை ,டைனிங் டேபிள் ,சோபா ,புத்தக அலமாரி அனைத்தும் அப்படியே பாதுகாக்கப்பட்டு வருகிறது,பல்வேறு சமயங்களில் எடுத்த புகைப்படங்களின் தொகுப்புகள் உள்ளது ...அந்த இரும்பு பெண்மணி இறுதியாக உடுத்தி இருந்த புடவை குண்டுகள் துளைத்து ரத்தகறை படிந்த நிலையில் காட்சிக்கு வைக்கப்படுள்ளது ....அவர் நடந்து செல்லும் போது சுடப்பட்ட இடத்தை கண்ணாடி பாதை அமைத்து காட்சியாக்கி உள்ளனர்..அடுத்து ராஜீவ் காந்தி அறையினில் அவர் பயன் படுத்திய பொருட்கள் ,அவரின் பைலட் லைசென்ஸ்,அவர் காலணி அவற்றுடன் அவரின் இறுதியாக குண்டு வெடிப்பின் பொது உடுத்தி இருந்த உடை கந்தலாக வைக்கபட்டுள்ளது .... அதை பார்க்கும் யாவர்க்கும் கண்கள் கலங்கும் ....அங்கிருந்து இந்தியா கேட் சென்றோம் முதலாம் உலகப்போரில் இறந்தவர்களின் நினைவாக கட்டப்பட்டுள்ள பிரமாண்ட வாசலின் கீழ் வீரர்களின் நினைவாக அணையா தீபம் எரிந்து கொண்டு இருக்கிறது....அடுத்து குதுப்மினார் சென்றோம் குத்புதீன் ஐபக் என்பவரால் கட்டப்பட்ட மிக உயரமான அழகான கட்டிடம் ..இதன் மேல் இருந்து சுற்றுபுறங்களை எளிதில் கண்காணிக்க முடியும்...முன்பெல்லாம் சுற்றுலா வருபவர்களை அனுமதித்ததாகவும் ஏதோ ஒரு விபத்து நடந்த பிறகு அதை நிறுத்தி விட்டதாகவும் சொல்கின்றனர்....அதன் அருகில் உள்ள இரும்பு தூண் மிக பழமை மிக்கதாக கூறபடுகிறது...வெயிலிலும் மழையிலும் துரு பிடிக்காமல் புதிது போலவே நிற்கும் இந்த தூண் உலகத்தாரை அதிசயப்பட வைக்கிறது ......
தொடரும் ......
தொடரும் ......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக