வெள்ளி, 19 டிசம்பர், 2014

பயணங்களின் பதிவுகள் (பூதப்பாண்டி)

  பூதப்பாண்டி இந்த ஊர் எல்லோருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ..ஆனால் எனக்கு மிக முக்கியமான ஊர் ...என் வேர்களின்  பூமி..அம்மா அப்பா பிறந்து வளர்ந்த ஊர் ..என் தாத்தா பாட்டி முப்பாட்டன்கள் வாழ்ந்த ஊர் ...கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சிறிய ஊரான இதில் நடக்கும் போது என் முன்னோர்கள் வாழ்ந்த மண்ணில் நடக்கிறோம் என்ற  உணர்வு பூர்வமான பந்தத்தை உணர்ந்தேன்..என் அப்பா பிறந்து வளர்ந்த வீட்டை அங்கு தங்கி இருந்தவர்களின் அனுமதி பெற்று பார்த்து புகைப்படம் எடுத்து வந்த போது அப்பா கூட இருப்பது போல் இருந்தது...பூதபாண்டி கோவில்,





,குளம்,தாடகை மலை ,என்று அம்மா ,அப்பா வளர்ந்த இடத்தை பார்த்து வந்தது மனதிற்கு நெகிழ்வாக இருந்தது .....ராஜராஜ சோழன் நடந்த தஞ்சையிலும்,பல்லவர்கள் நடந்த மாமல்லபுரதிலும் நடந்த போது ஏற்பட்ட சிலிர்ப்புக்கு சிறுதும் குறைவில்லை என் தாத்தாவும் ,ஆச்சியும் நடந்த மண்ணில் நடந்த போது .......

7 கருத்துகள்:

  1. மனதுக்குள் எத்தனை சந்தோஷங்கள்...
    சொந்த பூமி என்னும் சொர்க்க பூமியில் நடக்கும் போது...

    பதிலளிநீக்கு
  2. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோதரி...

    பதிலளிநீக்கு
  3. தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு