எப்போதும் காலை வேளையில் மட்டுமே பயணப்பட்டு இருந்த திருப்பதிக்கு இந்த முறை இரவில் பயணம் மேற்கொண்டோம் ...முன்பெலாம் சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் வழியெங்கும் அடர்த்தியான மரங்கள் இருபக்கமும் நிறைந்து இருக்கும் மரங்களின் ஊடே பயணிப்பது அருமையாக இருக்கும் ..இப்போது மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டு சாலை மிக பெரியதாக ஆகி விட்டது ..ஆனால் வறண்ட சாலையில் பயணிப்பது தான் சலிப்பாக இருக்கிறது... மலை மேல் ஏறும் போது இரவு பத்து ஆகி விட்டது ...செக் போஸ்டில் தீவிரவாதி போலவே பரிசோதனை செய்கின்றனர் ..மேல் ஏறி செல்லும் போது வானத்தில் நட்சத்திரங்கள் குறைவாக இருந்தாலும் கீழ நகரத்தின் மின்விளக்குகளின் ஒளி மிக அழகாக நட்சத்திரங்கள் கீழ கொட்டி கிடப்பது போல் அவ்வளவு அழகு...,அதை பார்க்கவே மீண்டும் ஒரு பயணம் செல்லலாம்..நாங்கள் மேல் சென்று சேர்வதற்கு வெகுநேரம் ஆகி விட்டதால் அங்கு ஹோட்டல் எதுவும் இல்லை...தெருவோர கடைகள் மட்டுமே இருந்தது...அதெற்கென ஒரு இடம் ஒதுக்கி தெருவெங்கும் பாய் விரித்து வைத்துள்ளனர்..இரவு முழுவதும் சுட சுட உணவு கிடைக்கிறது....தெருவில் உண்பதும் ஒருவித புது அனுபவமாக இருந்தது ...காலை தரிசனம் செய்ய சென்றோம் ...அன்று கூட்டம் குறைவாக தான் இருந்தது ஆனாலும் தேவை இல்லாமல் இரண்டு மணி நேரம் காக்க வைத்து பின்பு கூட்டம் சேர்ந்ததும் நெருக்கடியாக அனுப்புகின்றனர்....கடவுளுக்கு எதற்கு விளம்பரம் என்றே தெரியவில்லை ..ஆனாலும் கருவறையின் முன் ஜருகண்டி ஜருகண்டி என்று பிடித்து தள்ளுவது குறைந்திருகிறது ...பொறுமையாக நின்று பார்த்து வரலாம்... எல்லா இடங்களைம் மிக சுத்தமாக பரமரிகின்றனர் ....சூடான பால் உணவு தண்ணீர் எல்லாம் இலவசமாகவே எல்லா இடங்களிலும் தருகின்றனர்...ஒவ்வொரு முறையும் திருப்பதி புது அனுபவத்தை தருகின்றது....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக