மகனின் பள்ளியில் இருந்து 10 நாள் பயணம் தொடங்கினோம் ...முதலில் கேப்டவுன் போனோம்..சவுத் ஆப்ரிக்காவின் மூன்று தலைநகரங்களில் ஒன்றான கேப்டவுன் மிக அழகான ஊர் ...மிக சுத்தமான ஊரும் கூட ...நகரத்தில் நுழைந்ததும் முதலில் கண்ணில் படுவது டேபிள் மௌன்டென் என்னும் மலை ..அழகான மலை மேல் மேகத்தை வைத்து போல் இருக்கிறது,முதலில் வாட்டர் பிரண்ட் என்னும் இடத்திற்கு சென்றோம் ,அங்கு தான் ஆர்பர் உள்ளது, துறைமுகம் போல் இல்லாமல் பொழுதுபோக்கு இடம் போல் உள்ளது..மிக பெரிய ராட்டினம் ,குழந்தைகள் விளையாட்டு இடம், ஹோட்டல்கள் இருக்கிறது ...டச்சுக்காரர்கள் பயணித்து வந்த கப்பலை பார்வையிட வைத்திருக்கிறார்கள் ..இங்கே ராமேஸ்வரத்தில் தூக்கும் பாலம் உள்ளது போல் அங்கு நகரும் பாலம் அமைத்து இருக்கிறார்கள் ..படகு வரும் நேரத்தில் நகர்ந்து வழி விடுகிறது .கடந்ததும் திரும்ப பழைய இடத்திற்கு வந்து பொருந்தி விடுகிறது..அடுத்து டேபிள் மௌன்டன் மேல் கேபிள் கார் மூலம் சென்றோம்...அந்த இடம் பல நேரங்களில் சீதோஷ்ண நிலையின் காரணமாக போக முடியாமல் போய் விடும்...நல்ல வேலையாக நாங்கள் போன போது எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது ... அருமையான அனுபவம் 1067 அடி உயரத்தில் சில்லென்ற மேகத்தின் ஊடே நடந்து சென்று மேலிருந்து கேப்டவுன் அழகை பார்க்க இரண்டு கண்கள் போதாது ...மலை,கடல் ,ஊர் மூன்றும் சேர்ந்து பார்க்கும் போது நிச்சயம் இயற்கையின் அதிசயத்தை வியக்காமல் இருக்க முடிவதில்லை ..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக