சில பயணங்களும் சில நினைவுப்பொருட்களும் ....
புகைப்படங்கள் எப்படியோ அப்படி தான் சில பொருட்களும் ...நாம் பயணித்த நாட்களை நம் கண் முன் நிறுத்தும் ...அப்படி பயணத்தின் போது வாங்கி என் வீட்டில் நினைவு பொருளாக இருக்கும் சிலவற்றை உங்களுடன் பகிர விரும்புகிறேன்....
இந்த மரவேலைப்பாடுள்ள ஸ்டாண்ட் வாங்கியது 2013 ல் ....அப்பொழுது அப்பா பக்கவாத நோயால் ஒரு கையும் ,காலும், குரலும் செயலிழந்து இருந்தார் ... ஆயினும் வாக்கிங் ஸ்டிக் துணையுடன் நடப்பார் ...தன் தேவைகளை இடது கையால் எழுதி காட்டுவார் .....பயணங்கள் மேல் என்போலவே பெரும் காதல் கொண்டவர்...அந்த நிலையிலும் 10 நாள் பயணமாக மூகாம்பிகை ஹூப்ளி .சாரதா மடம் .உடுப்பி, சிருங்கேரி. ஹம்பி .சாமுண்டீஸ்வரி கோவில் .மைசூர் அரண்மனை என கர்நாடகா முழுவதும் எங்களுடன் உற்சாகமாக சுற்றி வந்தார்...அது போலவே கலை பொருட்கள் சேகரிப்பதில் பேராவல் கொண்டவர்....அந்த பயணத்தை முடித்து திரும்புகையில் மலைத்தொடரின் மேல் விற்று கொண்டிருந்த இதை வாங்க விரும்பினார் ....அவர் ஆசைக்காக வாங்கிய இந்த ஸ்டாண்ட் அவரையும் அவருடனான அந்த கடைசி பயணத்தையும் எப்போதும் பசுமையாக என் நினைவில் வைத்திருக்கிறது ......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக