புகைப்படங்கள் எப்படியோ அப்படி தான் சில பொருட்களும் ...நாம் பயணித்த நாட்களை நம் கண் முன் நிறுத்தும் ...அப்படி பயணத்தின் போது வாங்கி என் வீட்டில் நினைவு பொருளாக இருக்கும் சிலவற்றை உங்களுடன் பகிர விரும்புகிறேன்....
இந்த ஷோபீஸ் நான் சவுத்ஆப்ரிக்கா போயிருந்தபொழுது வாங்கியது... அங்கே அவுட்ஷ்ரோம் னு ஒரு இடம்.. அங்கே உள்ள ஆஸ்ட்ரீச்(நெருப்புகோழி ) பண்ணைக்கு போயிருந்தோம் ..அதனுடைய முட்டை ஓடு மிக பலமாக இருக்கும்.. அதன் மேல் ஏறி நின்றாலும் அது உடையாது..அவ்வளவு ஸ்ட்ராங் ..முன்பெல்லாம் ஆஸ்ட்ரீசோட இறகுகள் தங்கத்திற்கு இணையாக விற்பனை ஆகியதாம்..வெள்ளையர்கள் அதை அணிவதில் மிக பெருமை கொண்டார்களாம்..உலக போருக்கு பின் ஏற்பட்ட பணப் பற்றாக்குறையால் இறகு வாங்குவதை நிறுத்தியதால் அந்த தொழில் நசிந்து விட்டதாம் .. ..இப்பொழுது சில பண்ணைகள் மட்டுமே இருக்கிறது,அங்கு யானைசவாரி போல ஆஸ்ட்ரீச் மேல் நாம சவாரி செய்யலாம் தைரியமிருந்தால். .. அங்கு இருக்கும் கடைகளில் ஆஸ்டிரிச் முட்டை ஓடுகளால் ஆன அலங்கார பொருட்களை விற்பனை செய்கிறார்கள். ..அந்த இடத்தின் நினைவாக ஆஸ்ட்ரீச் ஓட்டின் மீது செய்த து இந்த ஷோபீஸ்😊...இதை பார்க்கும் போதெல்லாம் அதன் மேல் செய்த சவாரி நினைவினில் வந்துபோகும்😊
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக