வியாழன், 10 மார்ச், 2011

அம்மாவிற்கு பிறந்தநாள் பரிசு

அம்மா ..................
புரியாத வயதினில் இருந்தே
இப்பெயரிட்டே அழைக்கிறேன் உன்னை
உனகென்று இருந்த ஒர்பெயரை
தொலைத்து விட்டாய் திருமணமானதும்
இளவயதினில் மணம் புரிந்ததும்
இன்னாரின் மனைவி என்றும்
பிள்ளைகளாய் நாங்கள் பிறந்ததும்
எங்களின் தாய் என்றுமே அறியபட்டாய்.......

தீராத பஞ்சத்தின் பிடியினில்
வயிறு காய்ந்து நீ கிடந்த போதிலும்
எங்கள் வயிறு காயாதிருக்க
உன் ஊனுயிர் கரைத்து நீ உழைத்தாய் ....

கூலி கொடுத்து தைத்து தர
வழி இல்லாத நாட்களிலும்
பண்டிகை புதுத்துணி நாங்கள் உடுத்திட
இரவெலாம் கண்விழித்து நீ தைத்து தந்தாய் ....

பூப்ப்பைய்து நாங்கள் பெரியவர்கள் ஆனதும்
பூக்களினால் ஜடை தைத்து
நீ அழகு பார்த்தாய் ஆனால்
அன்றிலிருந்து நீ உன் அழகான நீள கூந்தலை
கொண்டை முடித்து பூக்களை மறந்தாய் .....

அழகாய் புடவையுடுத்தி அலங்காரம்
நாங்கள் புரிய ஆரம்பித்ததில் இருந்தே
நீ உன் அலங்காரங்களை துறந்து
வயதை அதிகமாக காட்டி கொண்டாய் ......

இப்போது நான் உணர்கிறேன் அம்மா
அம்மா என்கிற வார்த்தையின் பின்னால்
தியாகங்களும் அதனால் ஏற்படும் வலிகளும்
உள்ளதென்பதையும் தியாகங்கள் புரிகையில்
உனக்கும் வலித்திருக்கும் என்பதையும்........

எத்தனையோ பிறந்தநாள் பரிசுகள் நீ எனக்கு
கொடுத்திருக்கிறாய் என்னால் முடிந்த
கவிதை பரிசை உனக்கு அளிக்கிறேன் அம்மா
பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...........

10 கருத்துகள்:

  1. சுஜா உங்கள் வரிகளால் என் கண்களில் தாயை நினைத்து நீர்

    பதிலளிநீக்கு
  2. முகமூடி ...உங்கள் விமர்சனத்திற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  3. >>>எங்கள் வயிறு காயதிருக்க

    காயாதிருக்க

    பதிலளிநீக்கு
  4. >>>பண்டிகை புதிதுணி நாங்கள் உடுத்திட

    பண்டிகைக்கு புதுத்துணி நாங்கள் உடுத்திட அல்லது

    பண்டிகை புதிய துணி நாங்கள் உடுத்திட

    பதிலளிநீக்கு
  5. >>
    இப்போது நான் உணர்கிறன் அம்மா

    உணர்கிறேன்

    பதிலளிநீக்கு
  6. நன்றி தவறுகளை திருத்தி கொள்கிறேன் .....

    பதிலளிநீக்கு
  7. ஆறாவது வரியில் /மனம்/ என்பது /மணம்/ என்று இருக்க வேண்டுமோ? (சி.பி.செ கவனிக்காமல் எப்படி விட்டார்?)

    //தியாகங்களும் அதனால் ஏற்படும் வலிகளும்//
    தியாகங்களால் வலி ஏற்படுமா? வலி ஏற்பட்டால் அது தியாகமா? என்னை வரையில் இரண்டிற்கும் பதில் “இல்லை” என்பதே!

    நல்ல கவிதை... அந்தத் தாய் இதைப் படித்தாரா?

    பதிலளிநீக்கு
  8. நன்றி விஜய் தவறை திருத்தி விட்டேன் .....

    பதிலளிநீக்கு