
அவர்கள் இருவருக்கும்
ஒரே விதமான உரிமைகள்
ஏசி காரில் இருவருக்கும்
சொகுசு பயணங்கள் உண்டு
ஆடை அலங்காரங்கள்
குறைவில்லாமல் உண்டு
தேவைக்கு அதிகமாகவே
வித விதமான உணவுகள் உண்டு
இருவருக்குமே முதலாளியின்
படுக்கையறையில் இடமுண்டு
இருவரையுமே தன் அந்தஸ்தின்
அடையாளம் என்பார் முதலாளி
இருவருமே அவரை எதிர்த்து பேசுவதில்லை
அவர் சொல்லுக்கு அடங்கி
நடப்பது தான் இருவருக்கும் வேலை
அந்த இருவரில் ஒருவரை மட்டும்
முதலாளியம்மா என்றும்
மற்றொருவரை ஜிம்மி என்றும்
பெயர் சொல்லி அழைப்பதுண்டு........
வித்தியாசமான சிந்தனை...வித்தியாசமான கவிதை... அருமை ...
பதிலளிநீக்குகவிதைக்கு பொருத்தமான படம்... கவிதை ரொம்ப நல்ல இருக்குங்க
பதிலளிநீக்குமாறுபட்ட சிந்தனை... அருமை!!
பதிலளிநீக்குவருகை தாருங்கள் நந்தலாலா இணைய இதழுக்கு!!
நன்றி கரூன் சார் ....
பதிலளிநீக்குமிக்க நன்றி கமலேஷ் ....
பதிலளிநீக்குநன்றி நந்தலாலா இணைய இதழுக்கு ......
பதிலளிநீக்கு>>>மற்றொருவரை ஜிம்மி என்றும்
பதிலளிநீக்குபெயர் சொல்லி அழைப்பதுண்டு......
இது செம
நல்ல கவிதை! வேறென்ன சொல்ல!
பதிலளிநீக்கு