செவ்வாய், 5 ஜூலை, 2011

மனிதம் தொலைத்தவன்

நேற்று வரை நோயின் பிடியில்
நல்ல உணவுக்கும் வழியில்லை
மருந்து வாங்கவும் பணமில்லை
குடிக்க நீர் தரவும் ஆளில்லை .....

சதை எதுவும் இல்லாமல் எலும்பும் தோலுமாய்
கிழிந்த பாயில் கிடந்த அந்த மனிதரின் இறப்பில் ....

இன்று ஊரெங்கும் இரங்கல் போஸ்டர்
தேர்போல் ஜோடனை பல்லாக்கு
சின்னதும் பெரியதுமாய் மாலைகள்
தெருவெங்கும் பூக்குவியல்
அரசியல்வாதிகளின் அணிவகுப்பு அதில்
கண்ணீரில்லாத கண்களை துடைத்து கொண்டு
தகப்பனின் சாவில் சுயவிளம்பரம்
தேடும் இவனுமொரு மனிதனா ...?
மனிதம் தொலைத்த மிருகமா ...........

10 கருத்துகள்:

  1. அடேங்கப்பா.. வழக்கமான காதல்,குடும்பம் கவிதைல தென்றலாய்.. சமூகம் சார்ந்த விஷயங்களீலே புயலாய்.. செம

    பதிலளிநீக்கு
  2. நாட்டு நடப்பு.. நையாண்டி சோக சிரிப்பு

    பதிலளிநீக்கு
  3. எதற்கு இந்த ஐயம்? நிச்சயம் அவன் மிருகந்தான்... உண்மையின் உண்மையான பதிவு... நன்றி!

    பதிலளிநீக்கு
  4. நெத்தியடி கவிதை

    வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  5. இவர்கள் எல்லாம் மனிதர்கள் இல்லை மனித பிறப்பில் வாழும் மிருகங்கள்.... அருமையான கவிதை சுஜாக்கா

    பதிலளிநீக்கு