வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

ஊழல் எதிர்ப்பு

வெகு தூரத்தில் நடக்கிறது
ஊழல் எதிர்ப்பு போராட்டம்
எப்படியேனும் கலந்து கொண்டு
காண்பிக்க வேண்டும் என் ஆதரவை
என்றெண்ணி தேடினேன் வாகனங்களை

வாகனம் ஒன்றும் கைவசமில்லை
பேருந்திலும் இடமில்லை
ரயில் வண்டியிலும் இடமில்லை

இறுதியாய் பெரும் முயற்சி செய்து
ரூபாய் நூறு கையூட்டளித்து
பயணசீட்டை பெற்று பயணப்பட்டேன் பெருமிதமாய் .....

4 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள் சகோ உங்கள் சமூக சேவை உணர்வு
    மேலோங்க பகிர்வுக்கு நன்றி எங்க வீட்ட வாங்க
    மறக்காமல் .உங்கள் வரவுக்காகக் காத்திருப்பேன் .
    அங்கயும் சண்டைதா ஹி.......ஹி...ஹி ....

    பதிலளிநீக்கு
  2. திருநெல்வேலியிலிருந்து சென்னை பயணம், பயணச்சீட்டு காத்திருப்போர் பட்டியல், முன்பயணப்பெட்டியில் ஏறக்கூடாதாம், ஏறியும் இடம் கிடைத்தது திண்டுக்கல் வந்தப்பிறகு, கட்டாயமாக கையூட்டு கொடுக்க வேண்டியிருக்கிறது, பேரம் 100 ஆரம்பித்து 250 முடிவடைகிறது.

    பதிலளிநீக்கு