வியாழன், 13 அக்டோபர், 2011

அரசியல் கூத்து

வாத்தியங்கள் முழக்கமிட
கட்டியக்காரன் முன்மொழி சொல்ல
களறி கட்டியவன் பின் வந்து
கூத்தாடும் தெருகூத்து பற்றி பாடத்தில்
படித்த என் மகள் கேட்கிறாள் ..?

பேண்டு வாத்தியங்கள் முழங்க
வாகனத்தில் வந்த ஒருவன்
ஒலிபெருக்கியில் முன்மொழிய
திறந்த வண்டியில் ஒளிவெள்ளம் மின்ன
நிறைவேற்றவே முடியாத பல நூறு
வாக்குறுதிகளை அள்ளி வீசி
வருகின்ற அரசியல்வாதியை பார்த்து
கேட்கிறாள் இது தானோ தெருகூத்து என்று....

ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே
தரிசனம் தருகின்ற இவர்கள் ஆடுவது

தெருகூத்து அல்ல இது தான்
அரசியல் கூத்து என்றேன் நான் .......

7 கருத்துகள்:

  1. ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம், ஆனா இந்த கூத்தாடிகள் ரெண்டு பட்டால் மக்களுக்கு கொண்டாட்டம்

    பதிலளிநீக்கு
  2. அப்படியே ஓட்டு போடாதீர்கள் என வேண்டிக் கொள்கிறேன். அடுத்தவர்களையும் ஓட்டு போட வேண்டாம் என கேட்டுக் கொள்ளுங்கள்

    பதிலளிநீக்கு
  3. அரசியல் கூத்து ஆனால் வேடிக்கை பார்க்க பிடிக்காமல் மக்கள்.. கவிதை அருமை

    பதிலளிநீக்கு
  4. உள்ளாட்சித்தேர்தல் முடியும் வரை இவங்க தொந்தரவு ஜாஸ்தியாத்தான் இருக்கும்

    பதிலளிநீக்கு
  5. தமிழ் விளையாடுது.. ஒரு ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் கூட இல்லையே? உஷார் ஆகிடுச்சு உஷா..!!!!!

    பதிலளிநீக்கு
  6. விமர்சனகளுக்கு நன்றி .....இவர்கள் அடிப்பது கூத்து என்றாலும் ஓட்டு போடுவது நம் கடமை அல்லவா ....

    பதிலளிநீக்கு
  7. எது கடமை, கொள்ளையடிப்பதா? அதற்கு நாம் அங்கிகாரம் அளிப்பதா? எந்த வார்டில் எது நடந்தாலும் அந்த வார்டு உறுப்பினருக்கு கழிவுத் தொகை தரப்படுகிறது. அதற்காகதானே இந்த பலமுனை போட்டி.

    கொள்ளையடிப்பவனுக்கு ஊறுதுணையாய் இருப்பது கடமை என்றால் ஓட்டு போடுங்கள்

    பதிலளிநீக்கு