எங்களது மகன் முதன்முறையாக எங்களை அவனது பயிற்சி விமானத்தில் அழைத்து சென்றான்.அவன் அருகில் அமர்ந்து பயணம் செய்வது மிக வித்தியாசமாக இருந்தது .அருகில் உள்ள கிம்பர்ளே என்னும் ஊருக்கு அழைத்துசென்றான்.மேல் இருந்து பார்க்கும் போது அழகான வட்ட வடிவில் தெரிகிறது விவசாய நிலங்கள்..தண்ணீர் பாய்ச்ச ஏதுவாக வட்ட வடிவில் விவசாயம் செய்கிறார்கள் .கிம்பர்ளே வைர சுரங்கத்திற்கு பெயர்ப்பெற்ற ஊர்.அங்கு முன் காலத்தில் மனிதர்களாலே தோண்டப்பட்ட{MAN MADE HOLE} சுரங்கத்தை பார்த்தோம்...பிளெமிங் பறவை நிறைந்து இருந்த{FLEMING BIRD DAM} அணை பார்த்தோம்..நாம் கார் பார்கிங் செய்வது போல கிம்பர்ளே ரன்வேயில் விமானத்தை நிறுத்தி விட்டு அதற்கான பார்கிங் கட்டணத்தை செலுத்தி விட்டு ஊருக்குள் சென்றோம்.பெரிய மால்கள் உள்ளது எல்லா பொருட்களுமே விலை மிக அதிகமாக உள்ளது .அங்கு ஒரு ஹோட்டலில் சாப்பிட்டோம்.வெறும் உருளைகிழங்கு சிப்ஸ் கொஞ்சம் மீன் பச்சை காய்கறிகள் இது தான் மதிய உணவு ..மீன் வேண்டாம் என்றால் சிக்கன் மட்டன் பீப் அதுவும் பார்க்க பச்சையாகவே இருக்கிறது ...சாப்பாடே வேண்டாம் என்று மில்க்ஷேக் குடித்தேன்..பள்ளிக்கு திரும்பியதும் DJ வீட்டுக்கு சென்றோம்.மிருகங்களின் உடலை பாடம் செய்து வைத்துள்ளார்கள்.ஆஸ்ட்ரிச் மற்றும் மாட்டு பண்ணை வைத்து வளர்கிறார்கள் .எப்போதும் குளிராகவே இருப்பதால் மனதும் லேசாக இருக்கிறது ...மே மாதம் அதுவுமாய் வெயிலில் இருந்து தப்பித்து சில்லென்று இருந்தோம்.....
மிக்க மகிழ்ச்சி.
பதிலளிநீக்குஅருமையான பகிர்வு.
வாழ்த்துகள்.
தொப்பி போட்டிருக்கும் பப்பி யாரு> ?;-))
பதிலளிநீக்கு