வியாழன், 16 ஜூன், 2011

ஆசை

ஒவ்வொரு முறை கடக்கும் போதும்
தீராத மோகம் கொண்டான்
அழகான சிலையொன்ரின் மேல் .........

நாளும் பொழுதும் அதன் நினைவாகவே
ஊனும் உறக்கமும் தொலைத்து
சொந்தமாகி கொள்ள
சிரமேற்கொண்டு முயற்சித்தான் ......

கையிருப்பெல்லாம் கரைத்து
கடன்பட்டு காசு சேர்த்து
ஆசையாய் வாங்கி வந்து
வீட்டு முன்னறையில் அழகாய் வைத்திருந்தான் .......

இன்று நின்று பார்க்க நேரமில்லை
ரசித்து பார்க்க பொழுதுமில்லை
கடக்கும் போதும் பார்வை அதன்மேல் படிவதில்லை
பரிதாபமாய் நிற்கிறது அந்த சிலை
காதலித்து மணந்த அவன் காதல்
மனைவியின் நிலை போலவே ..........

8 கருத்துகள்:

  1. காதல் அழகின் மேல் இருந்தால் நிலைமை இப்படித்தான். ஆனால் காதல் அழகானது. . .கவிதை நன்று. . .

    பதிலளிநீக்கு
  2. காதல் தீர்ந்து போவதில்லை, ரசனை அழகின் மேல் இருந்துவிடக்கூடாது. . .இருந்தால் நிலைமை இப்படித்தான். . .கவிதை அருமை. . .

    பதிலளிநீக்கு
  3. மனையை சிலையாக்கியவிதம் நன்று

    வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  4. >>இன்று நின்று பார்க்க நேரமில்லை
    ரசித்து பார்க்க பொழுதுமில்லை
    கடக்கும் போதும் பார்வை அதன்மேல் படிவதில்லை
    பரிதாபமாய் நிற்கிறது அந்த சிலை
    காதலித்து மணந்த அவன் காதல்
    மனைவியின் நிலை போலவே ..........

    வலிகளைப்பதிவு செய்வதில்கூட இவ்வளவு செய் நேர்த்தியா?

    பதிலளிநீக்கு