வெள்ளி, 24 ஜூன், 2011

நவீன தாய் .

பள்ளி விட்டு திரும்பிய
மகளை முகம் கழுவி வரச்சொல்லி
அவசரபடுத்தினாள்......
வகுப்பறையின் கதைகளை சொல்ல
ஆவலுடன் திறந்த அவள் வாயினுள்
அவசரமாய் உணவை அடைத்தாள் ....
வீட்டுப்பாடங்களை வேகமாய்
முடிக்க சொல்லி வேலைகளை
பார்க்கப் போனாள்......
படித்து முடித்த மகளின் வாயினுள்
திரும்ப சிறிது உணவையூட்டி
ஆசையாய் பேச வந்த குழந்தையை
நாளை பள்ளிக்கூடம் போகவேண்டுமென கூறி
அவசரமாய் தூங்க வைத்து
நிதானமாய் வந்து அமர்ந்தாள்
தொலைக்காட்சி தொடரில் நடிக்கும்
குழந்தையின் மழலை பேச்சு
தனக்கு பிடிக்கும் எனக்கூறி
அதனை ரசிப்பதற்கு.............

8 கருத்துகள்:

  1. நிதர்சனமான உண்மை ....அருமை வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. போலிகளை நம்பியே நிஜங்களை இழந்துக்கொண்டிருக்கிறோம்....

    பதிலளிநீக்கு
  3. சிந்தனை சிறப்பு ..
    இன்றைய சில தாய் மார்கள் இப்படியும் இருக்கின்றார்கள்
    என்ன செய்வது ...

    பதிலளிநீக்கு
  4. உன்மைதான் நம்முடைய ரசனைகள் வேற்று உருவம் அடைந்துவிட்டன. . .நல்ல கவிதை

    பதிலளிநீக்கு
  5. இந்த உலகம்
    இப்படிதான் என
    யதார்த்தங்களை
    எரிய விட்டு சென்றுள்ளீர்கள்

    இதுமட்டமல்ல
    ஏனைய கவிதையும்
    இப்படியே எடுத்துரைக்கிறது
    இந்த மனிதர்கள் மாறுவார்களா?.......

    பதிலளிநீக்கு
  6. ஹா ஹா செம.. இந்தக்கவிதையை கண்டதும் நான் எழுதிய ஒரு ட்வீட் நினைவு வருது..


    பக்கத்து வீட்டுக்குழந்தைகளை ரசிக்காதவர்கள் ஓவியங்களில்,போஸ்டர்களில்,ஸ்டில்களில் குழந்தை படங்களை ரசிப்பது கேலிக்குரியது

    பதிலளிநீக்கு
  7. நிஜங்களை நேசிக்காமல் மனிதன் நிழலை ரசிக்கிறான்

    பதிலளிநீக்கு