ஞாயிறு, 26 ஜூன், 2011

முகமூடி மனிதர்கள்

பிறந்ததும் அழுதோம்
பின் தானாக சிரித்தோம்
பார்ப்பவர்களின் எண்ணம உணராமல்
தவழும் போதிலும் நடக்கும் வயதிலும்
நம் எண்ணம் போல் வீழ்ந்தோம்
பின் எழுந்தோம் .........
மாற்றான் எண்ணங்களை பற்றி
சிந்திக்க எண்ணிய வேளையினிலே
மாட்டி கொண்டோம் முகமூடியை
இயக்கங்கள் எல்லாம் மற்றவர்
எண்ணங்களை ஒட்டியே
நம் செயல்கள் எல்லாம் மற்றவர்
எண்ணம் போலவே ........
அடுத்தவர் சிந்தனை பற்றி
சிந்தித்தே நம் வாழ்வை இழக்கிறோம்
மாட்டிய முகமூடி கழட்டபடாமலே
வாழ்ந்து முடிக்கிறோம்
மண்ணில் புதையும் காலம் வரை .....

6 கருத்துகள்:

  1. ஆஹா.. அழகு.. கவிதை.. முகமூடி அணீயா மனிதன் ஏது இவ்வுலகில்?

    பதிலளிநீக்கு
  2. நம்முடைய தருணங்களை பலருக்காவும் நாம் செலவு செய்து விடுகின்றோம். . .நல்ல படைப்பு. . .

    பதிலளிநீக்கு
  3. மனித மனங்களின் இயல்பினை விபரிக்கும் அருமையான கவிதை....

    பதிலளிநீக்கு