சனி, 13 ஆகஸ்ட், 2011

மறவாத காதல்

நீ நடந்த பாதையில்
நடந்ததில் என் பாதை
எதுவென்று மறந்தேன் .......

நீ ரசித்தவற்றையே
நானும் ரசிப்பதனால்
என் ரசனைகளை மறந்தேன் ....

உன் பேச்சினையே
கிளிப்பிள்ளை போல்
நானும் பேசுவதால் என்
பேச்சு திறமையை மறந்தேன்......

எதை மறந்த போதிலும்
நான் மறவாத ஒன்று உண்டென்றால்
அது நான் உன் மேல் கொண்ட காதல் ......

6 கருத்துகள்:

  1. முதன் முதலாக முதன் முதலாக பரவசமாக பரவசமாகத்தான் ( முதல் வாசிப்பு)

    பதிலளிநீக்கு
  2. >>
    எதை மறந்த போதிலும்
    நான் மறவாத ஒன்று உண்டென்றால்
    அது நான் உன் மேல் கொண்ட காதல் ...

    ஃபினிஷிங்க் டச் ஜம்

    பதிலளிநீக்கு
  3. அருமையான வரிகள்

    பதிலளிநீக்கு
  4. காதல் மறதி

    வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  5. ரசனையில் பூப்பதுதான் காதல். . .அருமையான கவிதை. . .

    பதிலளிநீக்கு
  6. ரசனைகள் மாறும்படும்போதுதான்
    மனிதர்கள் மாறுபடுகிறார்கள்
    ஆயினும்
    கொண்ட காதல்
    அனைத்தையும் மறந்து விடுகிறது

    பதிலளிநீக்கு