சனி, 8 ஜூன், 2013

பயணங்களின் பதிவுகள் {சவுத் ஆப்ரிக்கா}

இந்த ஆண்டு விடுமுறையில்  எனது மகன் படிக்கும் சவுத் ஆப்ரிக்கா நாட்டுக்கு பயணம் செல்ல முடிவெடுத்து நான் எனது கணவர் மகள் மூவரும் பயணித்தோம்..சென்னையில் இருந்து அபுதாபி அங்கிருந்து ஜோஹன்ஸ்பர்க்  போய் சேர்ந்தோம் ...பனிரெண்டு மணி நேர பயணம் ....36000 அடி உயரத்தில் பயணிக்கும் போதே நமக்கு கீழ்  பாலைவனங்கள் , மலைகள். பஞ்சுபோன்ற  மேகங்கள் தெரிகிறது , பார்க்கும் போதே கொள்ளை அழகாக உள்ளது ....ஜன்னல் வழியாக பார்க்க வேண்டிய அவசியமே இல்லாமல் நம் முன்னாடி உள்ள மானிட்டர் வழியாகவே பார்த்து கொண்டு வர முடிகிறது .....அங்கே போய் இறங்கியதுமே ஓர் லேடி கஸ்டம்ஸ் அதிகாரி எங்களை அழைத்து சோதனையிட்டார் ...எங்கள் மகனுக்காக கொண்டு சென்றிருந்த உணவு பொருட்களை கொண்டு செல்ல கூடாது என்று கூறினார்...அவ்வளவு உணவு பொருட்களை எடுத்து சென்று மகனிடம் சேர்க்க முடியாமல் போய் விடுமோ என்று கவலையுடன் விவாதம் செய்து கொண்டு இருந்த போது ஒரு முஸ்லிம் நண்பர் அவர்கள் பணத்தை எதிர் பார்கிறார்கள் 200 ரேண்டு கொடுத்தால் விட்டு விடுவார்கள் என்று சொன்னார் .நமது மதிப்பில் 1200 ருபாய் கொடுத்ததும் பேசாமல் அனுப்பி விட்டார்கள்....எங்கே போனாலும் ஊழல் இருக்கும் என்பது புரிந்தது .......அன்று இரவு எனது மகனின் நண்பர் வீட்டில்  தங்கினோம்.....

.தொடர்வேன்.....

6 கருத்துகள்:

  1. பயணிக்கும் போது, பூமிக்கும் நமக்குமான தொடர்பு விட்டு போன மாதிரியான ஒரு பிரமிப்பு ஏற்படும் !!

    கவிதாயினி நன்றாகவே பயணத்தை ரசிச்சிருக்காங்கனு தெரியுது !

    மனிதர்கள் இருக்கும் இடத்தில் ஊழல் இல்லைனா எப்டி ?!! :)

    பயண கட்டுரை தொடரட்டும் தோழி...

    பதிலளிநீக்கு
  2. அருமையான பதிவு.
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. >>எங்கே போனாலும் ஊழல் இருக்கும் என்பது புரிந்தது


    ஹி ஹி

    பதிலளிநீக்கு