திங்கள், 10 ஜூன், 2013

பயணங்களின் பதிவுகள் {சவுத் ஆப்ரிக்கா 2}


கவிதைகளின் பாதையில் இருந்து விலகி பயணங்கள் பற்றி எழுதி உள்ளேன் ...நண்பர்கள் படித்து விமர்சித்தால் மகிழ்வேன் .....அன்புடன் சுஜா .......


பயணங்களின் பதிவுகள் {சவுத் ஆப்ரிக்கா}  

  ஜோனஸ்பர்க் மிக குளிராக இருந்தது ..நண்பரின் வீட்டில் எங்களுக்காக சிக்கன் செய்து வைத்து இருப்பதாக மகன் சொன்னான் ,சாப்பிட சென்றோம் பிரட் ,வைத்து இருந்தார்கள்..முட்டையை பாதி வேக்காட்டில் வேக வைத்து .சிக்கனை இனிப்பாக செய்து இருந்தார்கள்...எனக்கு பிடிக்கவில்லை என்பதை பார்த்த என் மகன் இங்கிருக்கும் இருபது நாட்களும் இதை தான் சாப்பிட வேண்டும் என்று கூறினான்..அங்கு  அழகழகாய் பறவைகளை வளர்கிறார்கள்...நண்பரின் மனைவி புடவை கொண்டு வரவில்லையா என்று செல்லமாக கோபித்து கொண்டார்...இந்தியாவில் இருந்து வரும் நண்பர்களிடம் இனிப்பும் புடவையும் எதிர்பார்கிறார்கள்...மறுநாள் என் மகன் படிக்கும் பள்ளிக்கு கிளம்பினோம் . எதிர்ப்படும் அனைவரும் goodmorning,how r u என்று கேட்காமல் போவதில்லை...பஸ்ஸில் பயணித்தோம் .பாதையில் ஒரு மேடு பள்ளம கூட கிடையாது...பஸ்ஸில் காபி பிஸ்கட் தருகிறார்கள் ...ஒரு குலுக்கல் கூட இல்லாமல் காபி குடிக்கலாம் ,பஸ்சின் உள்ள டாய்லெட் வசதி உள்ளது...வெள்ளையர்கள் எல்லோரும் இன்முகத்துடன் இருகிறார்கள்...கருப்பர்கள் சிலர் அன்பாகவும் சிலர் சற்று கடுமையான முகத்துடனும் இருகிறார்கள் ....வெள்ளையர்கள் வாழ்வில் ஏற்றதுடனும் கருப்பர்கள் தாழ்ந்த நிலையிலும் இருகிறார்கள்...கருப்பர்கள் மட்டுமே தெருவில் நடக்கிறார்கள்..வெள்ளையர்கள் யாருமே நடப்பதில்லை,காரில் தான் செல்கிறார்கள்.ஏற்றதாழ்வினால் அவர்களுக்குள் எப்போதும் ஒரு பனிப்போர் நடந்து கொண்டு தான் இருக்கிறது......





தொடர்வேன்........

3 கருத்துகள்:

  1. கவிதையை விட்டுவிட்டதாக சொன்னதற்காகவே இந்தப் பின்னூட்டம்.. மிக்க நன்றிகள்..!

    இது போன்ற பயணக் கட்டுரைகளையே தொடருங்கள்..! படிக்க ஆவலோடு காத்திருக்கிறோம்..!

    பதிலளிநீக்கு
  2. எழுத்துக்களுக்கு மேல் வர்ணம் அடித்தாற் போல இருக்கிறது. படிப்பதற்கு சிரமமாக இருக்கிறது. தகுந்த மாறுதல்கள் செய்யுங்கள்.
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. பேன் ட்ரான்ஸ்ஃபர் ஆகிடப்போகுது , நகருங்க ;-))

    பதிலளிநீக்கு