செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

தம்பி வீட்டில் மதிய உணவு...மட்டன் குழம்பு ரெடி பண்ணி இருந்தாங்க ...ஒரு வாய் சாப்பிட்ட எல்லோரும் முகத்தை சுளிதோம் ...குழம்பில் ஏதோ கெமிக்கல் வாடை ....அடுத்த உருண்டை சாப்பிடவே முடியவில்லை....கறியில் தான் ஏதோ பிரச்சனை என்று நினைத்து எல்லோரும் கறிகடைகாரனை திட்டி கொண்டே சாப்பிடாமல் எடுத்து வைத்து விட்டோம் ...600 ரூபாய் கொடுத்து வாங்கிய கறி இப்படி வீணாகி போய் விட்டதே என்று எல்லோருக்கும் வருத்தமாகி விட்டது ...மறுநாள் பீன்ஸ் பொரியல் செய்து சாப்பிட உடகார்ந்த போது அதிலேயும் அதே வாடை ...குழம்பி விட்டோம் ...கொஞ்சம் ஆராய்ச்சி செய்து இரண்டுக்கும் பொதுவான விஷயத்தை கண்டு பிடித்தோம்....தேங்காய் ...இரண்டிலேயும் தேங்காய் தான் பொதுவான விஷயமாக இருந்தது ...அந்த தேங்காயின் மீதியை சாப்பிட்ட போது தெளிவாகியது....தேங்காயின் துண்டில் அதிகமான கெமிகல் வாடை....இப்போது தான் முதன் முறையாக தேங்காயில் கூட இப்படி ஒரு வாடை வரும் என்பதை அறிந்து கொண்டோம்.... தேங்காய் அதிக அளவில் அடர்த்தியாக விளைய தென்னை மரத்தில்  அதிகமாக போடப்படும் கெமிக்கல் உரத்தினால் அந்த கெமிக்கலின் மணம் தேங்காய் முழுவதும் பரவி உள்ளதாக சொன்னார்கள் ....இது உண்மையா என்று தெரியவில்லை ..ஆனால் தேங்காயை சமையலில் சேர்க்கும் போது இனி சோதித்து பார்க்காமல் சேர்க்க கூடாது என்று தெரிந்து கொண்டேன் .....

2 கருத்துகள்:

  1. அதில் சேர்க்கும் கெமிக்கல் நல்லதா கெட்டதா என்பதை எப்படி அறிவது..?

    இப்ப எல்லாவற்றிலும் கெமிக்கல் மயம்...

    பதிலளிநீக்கு
  2. அதை கண்டுபிடிக்க முடியாதது தான் நம் துரதிர்ஷ்டம் ....

    பதிலளிநீக்கு