முன்பெல்லாம் எப்போதும்
தொடர்பில் இருந்தாய்
அழைப்புக்கெல்லாம் பதில் அளித்தாய்
நாட்கள் சென்றதும்
என் அழைப்புக்கள் எல்லாம் தொலைக்கப்பட்டது
பின் அழைத்த போதெல்லாம்
தொடர்பு எல்லைக்கு அப்பால்
சென்று விட்டது உனது எண்
அழைப்புகளோ ஏற்புகளோ இல்லை எனினும்
எனது தொலைபேசி உனது எண்ணையும்
என் இதயம் உன்னையும்
அழிக்காமல் பதிந்துள்ளது
அன்பின் மிச்ச சுவடுகளாய் ......