நைஸ்னா அழகிய சிறிய ஊர்(place of wood)...எங்கு பார்த்தாலும் பைன் மரங்கள் ..மரங்களின் ஊடே ஆங்காங்கே வீடுகளும் தங்கும் அறைகளும் உள்ளது.மர சாமான்கள் தயாரிப்பது தான் அங்கு முக்கிய தொழில்.அங்கு உள்ள யானைகள் சரணாலயம் போனோம்.உள்ளே செல்வதற்கு முன் எல்லோரும் யானைக்கு 250 ருபாய் கொடுத்து சின்ன பக்கெட்டில் பழங்களை வாங்கி கொள்கிறார்கள் ,ஆப்ரிக்கா யானை நம்மூர் யானை போல் இல்லாமல் சாம்பல் நிறத்தில் பார்பதற்கு சிலை போலவே இருக்கிறது ..அதன் காதுகள் ஆப்ரிக்கா நாட்டின் மேப் போலவே இருக்கும் என்றார் எங்க கைடு ..வாங்கி வந்த பழங்களை எல்லோரும் யானைகளுக்கு கொடுத்தோம்..யானைகளும் அவற்றை ஆவலோடு தின்கின்றன ,அவற்றின் அருகில் நின்று புகைப்படம் எடுத்து கொண்டோம்.யானை தந்ததால் ஆனா பியானோ ,மற்றும் பல பொருட்களை கண்காட்சியாக வைத்து இருகிறார்கள் ...அதை பார்த்து விட்டு அடுத்து டிசிகாமா காடு சென்றோம் ..நைசஸ்னா மற்றும் டிசிகாமா இரண்டு ஊர்களும் இணைபில்லாமல் தனி தனியாக இருந்தது அதன் மேல் ஒரு பாலம் போட்டதும் தான் இரு ஊர்களும் இணைந்தனவாம் ...டிசிகாமா காட்டில் 1000 வருடத்து மரம் இருக்கிறது ...அதை ஒரு சுற்றுலா தளமாக்கி உள்ளனர்..அடர்ந்து பரந்து விரிந்துள்ள அந்த மரம் பார்க்க வியப்பாக உள்ளது ..இங்கு பைன் மரங்களை அரசாங்கத்துடன் ஒப்பந்தம் போட்டு தனியார் வளர்கின்றனர் ..காட்டினுள் மரத்தினால் ஆன தாங்கும் அறைகள் அமைத்துள்ளனர் ...காட்டினுள் தங்கி இருந்தது புது விதமான அனுபவமாக இருந்தது ,,,,
தொடரும்...........
தொடரும்...........