வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013
பயணங்களின் பதிவுகள் [ சவுத் ஆப்ரிக்கா 10}
இன்று நாங்கள் சென்றது Bloukrans பிரிட்ஜில் பஞ்சி ஜம்ப் நடக்கும் இடத்திற்கு..உலகின் மிக உயரமான பஞ்சி ஜம்ப் பாலம் 708 அடி உயரம் உள்ள அதன் மேல் இருந்து கால்களில் பலமான கயிறு ஒன்றின் மூலம் தலை கீழாக குதிப்பது இந்த விளையாட்டு...விளையாட்டு என்று சொன்னாலும் பார்க்கும் போதே வயிற்றில் பந்து உருளுகிறது ..என் மகன் விக்கி அதில் குதிக்க செல்ல ஆசை பட்ட போது பயம் இருந்தாலும் அவன் விருப்பதிர்க்காக சம்மதித்தோம் ..நேரில் தெளிவாக பார்க்க முடியாததால் ஒரு அறையில் உள்ள தொலைகாட்சியில் அதை கானொளி மூலம் ஒளிப்பரப்புகின்றனர்... குதித்து விட்டு திரும்பிய என் மகன் மிகவும் த்ரிலிங்கான அனுபவமாக இருந்ததாக சொன்னான் ..அங்கிருந்து போர்ட் எலிசபத் என்னும் ஊருக்கு வந்தோம் ...எங்கே சென்றாலும் தனியாக வெளியில் நடமாட முடிவதில்லை ..எங்கு சென்றாலும் வாகனத்தில் ஏறி பாதுகாப்பாக செல்ல வேண்டி இருக்கிறது..அங்கிருந்து மறுநாள் காலை ஜோன்ஸ்பர்க் வந்தோம் அங்கிருந்து "சாம்பியா" சென்றோம் ..சாம்பியா நமக்கு கிரிகெட் மூலம் அறிமுகமான "ஜிம்பாப்வே "வின் மிக அருகில் உள்ளது ..உலகின் மிக பெரிய அருவியான விக்டோரியா பால்ஸ் காண்பதற்கு சென்றோம் .. முதலில் ஜிம்பாப்வே செல்ல முடிவெடுத்து இருந்த எங்களுக்கு மே மாதம் ஜிம்பாப்வேவில் இருந்து பார்த்தால் தண்ணீர் அதிகமாக இருக்காது என்றும் சாம்பியாவில் இருந்து பார்ப்பது தான் அழகாக இருக்கும் என்று கூறியதால் அங்கு சென்றோம்..மகன் சவுத் ஆப்பிரிக்காவில் ஸ்டடி விசாவில் தங்கி இருப்பதால் அவனுக்கு விசா கிடைக்கவில்லை...மகளுக்கு அந்த ஊரிலேயே சென்று விசா எடுத்து கொள்ள சொல்லி விட்டார்கள் ..அதனால் நாங்கள் மூவரும் மட்டும் சென்றோம்...சாம்பியா ஒரு ஏழை நாடக இருந்தாலும் இறைவன் அந்த நாட்டிற்கு கொடுத்த மிக பெரிய அழகு பொக்கிஷம் விக்டோரியா பால்ஸ் ......
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)