ஞாயிறு, 22 ஜூன், 2014
பயணங்களின் பதிவுகள் (அந்தமான் பாகம் 2)
போர்ட் பிளேயரில் இருந்து படகு மூலம் "ரோஸ் தீவு "சென்றிருந்தோம் ...அங்கு பார்க்கும் இடங்கள் எல்லாம் ரோஸ் வண்ணத்தில் இருப்பதால் அதற்கு அந்த பெயர் ..அங்கு வெள்ளையர்கள் பயன்படுத்திய நீச்சல் குளம் ,அதை சூடேற்ற வைத்திருந்த ஹீட்டர் ,பேக்கரி ,சர்ச், கடை ஆகியவை பாழடைந்த நிலையில் இருக்கிறது ...பாழடைந்த வீடுகளின் மீது மரங்களின் வேர்கள் படர்ந்து இருப்பது பார்க்க ஆங்கில பேய் படங்களின் வீடு போல் இருக்கிறது....கடலின் சீற்றத்தால் இந்த இடம் அழிந்ததாக சொல்கிறார்கள்...அடுத்து நாங்கள் சென்றது "கோரல் தீவு "..அங்கு பவழ பாறைகள் பார்ப்பதற்கு மூன்று வகையினில் செல்லலாம்...கண்ணாடி படகு எனப்படும் படகின் அடி பகுதியில் கண்ணாடி பொருத்தி இருப்பார்கள் பயணிக்கும் போதே பார்த்து கொண்டே செல்லலாம்...அடுத்து கண்ணாடி மற்றும் மூச்சு குழல் மாட்டி கொண்டு நீரின் அடியில் பார்க்கலாம்..அடுத்து கடலின் நடுவில் இறங்கி நடந்து கொண்டு பவழ பாறைகளை ரசிக்கும் sea walk ...நாங்கள் அதில் செல்ல முடிவெடுத்தோம்...கடலில் படிகளில் இறங்கியதும் ஆக்சிஜன் ஹெல்மெட் மாட்டி விடுகிறார்கள் ..மெதுவாக படியினில் இறங்கினோம் ..காது வலிக்க ஆரம்பிகிறது ...சிறிது நேரம் சென்றவுடன் சரி ஆகி விடுகிறது ..தரையை தொட்டவுடன் கால்கள் தரையில் பதியாமல் மிதப்பது போலவே உள்ளது ..நடந்து ,
வியாழன், 19 ஜூன், 2014
பயணங்களின் பதிவுகள் (அந்தமான் பாகம் 1)
அந்தமான் பயணதிற்கு போக முடிவு செய்ததுமே அங்கே என்ன இருக்கிறது அது வெறும் தீவு அதில் மரங்களும் மணல்வெளி மட்டுமே இருக்கும் என பயணத்திற்கு முட்டுக்கட்டை போட்டனர்.நாமும் போய் அதை பார்த்து விட்டு வருவோம் என்று கிளம்பினோம்...அந்தமான் ஏர்போர்ட் மிக சிறியதாக இருந்தது ..அனலும் சென்னைக்கு குறைவில்லாமல் இருந்தது..உணவு வகைகள் விலை அதிகம் இல்லை ..ஹோட்டல் அறைகளும் நியாமான வாடகையில் கிடைக்கிறது...முதலில் செல்லுலார் ஜெயில் பார்த்தோம்..பாழடைந்து போன சிறை அறைகள் மிக சிறிய அளவினில் இருந்தது வெளிச்சம் வர சிறிய ஜன்னல் ஒன்றும் உள்ளது ...அதனுள் நின்று புகைப்படம் எடுத்து கொண்டோம்... நாம் இப்படி சுதந்திரமாய் சுற்றி திரிய தம் வாழ்க்கையையே இந்த சிறிய அறையினுள் தொலைத்த பல்லாயிரம் தியாகிகளை நினைவு படுத்தாமல் இருக்க முடியவில்லை..தூக்கு மேடையும் ,செக்கிழுத்த இடமும் அதை மேற்பார்வைட வெள்ளையர்கள் அமர்ந்திருந்த நாற்காலியும் அப்படியே இருக்கிறது ...முதலில் சக்கர வடிவில் கட்டப்பட இந்த சிறை இயற்கையின் சீற்றத்தால் அழிந்து இப்போது ஒரு பகுதி மட்டும் மிச்சம் உள்ளது ..மாலை நேரத்தில் லேசர் ஒலி ஒளி அமைப்பு மூலம் சுதந்திர போராட்ட வீரர்கள் இந்த சிறையினில் பட்ட அடிகள். சித்ரவதைகள் இவற்றை ஒளிபரப்புகின்றனர்
கேட்பவர்கள் கண்கலங்குகின்றனர்....தியாகிகளின் நினைவாக அணையா விளக்கு எரிந்து கொண்டு இருக்கிறது...சிறை வாழ்கையை கண்காட்சியாக வைத்து இருகின்றனர் அதை பார்க்கும் போது அந்த காலத்திற்கே சென்று வந்தது போல் உணர்ந்தோம் .........தொடரும்
கேட்பவர்கள் கண்கலங்குகின்றனர்....தியாகிகளின் நினைவாக அணையா விளக்கு எரிந்து கொண்டு இருக்கிறது...சிறை வாழ்கையை கண்காட்சியாக வைத்து இருகின்றனர் அதை பார்க்கும் போது அந்த காலத்திற்கே சென்று வந்தது போல் உணர்ந்தோம் .........தொடரும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)