உயர் தர ஜாதி நாயை சங்கிலி பிடித்து தெருவோரம் அழைத்து சென்று கழிவுகள் கழித்ததும் வீடு கொண்டு வந்து சேர்க்கும் பணக்கார வீட்டு வேலைகாரியின் பிள்ளை கிடக்கிறது சிறுநீரில் நனைந்தபடி துடைத்து விட ஆளில்லாமல் .....
கடை கடையாய் தேடி பார்த்தேன் உன் கைகளில் மிளிரும் அழகான கடிகாரம் போல் வாங்கிட .... தேடி அலுத்து கிடைக்காமல் சோர்ந்த போது தான் புரிந்தது அழகு அந்த கடிகாரத்தில் இல்லை என்பதும் உனது கைகளில் அது உள்ளதால் தான் அது அழகு என்பதும் ......
அம்மா அடித்ததற்காக அழும் குழந்தையின் அழுகையின் பின்னால் ஒளிந்திருக்கிறது வாங்காமல் போன விளையாட்டு பொருட்களும் உடைந்து போன பொம்மைகளும் அழைத்து போகாத இடங்களுக்குமான ஏக்கங்களின் மிச்சங்கள் ....