செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

தம்பி வீட்டில் மதிய உணவு...மட்டன் குழம்பு ரெடி பண்ணி இருந்தாங்க ...ஒரு வாய் சாப்பிட்ட எல்லோரும் முகத்தை சுளிதோம் ...குழம்பில் ஏதோ கெமிக்கல் வாடை ....அடுத்த உருண்டை சாப்பிடவே முடியவில்லை....கறியில் தான் ஏதோ பிரச்சனை என்று நினைத்து எல்லோரும் கறிகடைகாரனை திட்டி கொண்டே சாப்பிடாமல் எடுத்து வைத்து விட்டோம் ...600 ரூபாய் கொடுத்து வாங்கிய கறி இப்படி வீணாகி போய் விட்டதே என்று எல்லோருக்கும் வருத்தமாகி விட்டது ...மறுநாள் பீன்ஸ் பொரியல் செய்து சாப்பிட உடகார்ந்த போது அதிலேயும் அதே வாடை ...குழம்பி விட்டோம் ...கொஞ்சம் ஆராய்ச்சி செய்து இரண்டுக்கும் பொதுவான விஷயத்தை கண்டு பிடித்தோம்....தேங்காய் ...இரண்டிலேயும் தேங்காய் தான் பொதுவான விஷயமாக இருந்தது ...அந்த தேங்காயின் மீதியை சாப்பிட்ட போது தெளிவாகியது....தேங்காயின் துண்டில் அதிகமான கெமிகல் வாடை....இப்போது தான் முதன் முறையாக தேங்காயில் கூட இப்படி ஒரு வாடை வரும் என்பதை அறிந்து கொண்டோம்.... தேங்காய் அதிக அளவில் அடர்த்தியாக விளைய தென்னை மரத்தில்  அதிகமாக போடப்படும் கெமிக்கல் உரத்தினால் அந்த கெமிக்கலின் மணம் தேங்காய் முழுவதும் பரவி உள்ளதாக சொன்னார்கள் ....இது உண்மையா என்று தெரியவில்லை ..ஆனால் தேங்காயை சமையலில் சேர்க்கும் போது இனி சோதித்து பார்க்காமல் சேர்க்க கூடாது என்று தெரிந்து கொண்டேன் .....

திங்கள், 20 பிப்ரவரி, 2017

வெள்ளிவிழா 25 (அக்டோபர் 3/2016)
Time Travel ...

2016.....கால் நூற்றாண்டு காதல்வாழ்க்கை பயணம் இன்று வெள்ளிவிழா காண்கிறது...திருமணவாழ்வு இனித்திட சகிப்புதன்மை,பொறுமை,தன் துணையின் குணமறிந்து அவர்களின் குணத்தோடு அவர்களை ஏற்று கொள்ளுதல் ,நிபந்தனை இல்லா அன்பு இவையே இல்லற வாழ்வை சிறக்க செய்திடும்......நான் பகிர்ந்த வாழ்வின் நினைவுகளை படித்து வாழ்த்திய அன்புள்ளங்களுக்கு மிக்க நன்றி. ..என்றும் இந்த அன்பான வாழ்த்துக்கள் எங்களை மகிழ்வுடன் வாழ வைக்கும். .......உங்கள் ஆசிகளுடன் இத்தொடரை செய்கிறேன்..... . — celebrating 25 th anniversary with Saidai Damu.


வெள்ளிவிழா (october 3/2016


)சிறப்பு பதிவு 24
Time Travel 

2015......மகளை பொறுத்த வரை அவளுக்கு இப்போது பதினெட்டு வயதென்பதே அவருக்கு உணர்வில்லை. .இப்பவும் அவரை பொறுத்தவரை அவள் பாப்பா தான். 
..
எங்கள் காதலில் ஆரம்பித்த இந்த வாழ்க்கை கதை இன்று என் மகனின் காதலில் வந்து நிற்கிறது. ..மகன் ஒரு பெண்ணை விரும்பி அவரிடம் அவளை பற்றி சொல்லி அறிமுகப்படுத்தி ஒரே ஒரு ஒற்றை வரியில் அவரிடமிருந்து சம்மதம் பெற்றான். ..அது
"அப்படியே அம்மாவின் குணம் அவளுக்கு "என்பது தான் அது .....அந்த ஒற்றை வரிக்காகவே சம்மதம் தெரவித்தார் அவர்...... — remembering someone very special with Saidai Damu.
வெள்ளிவிழா (october 3/2016


) சிறப்பு பதிவு 23
TIME TRAVEL

2013...2014.......மகன் பிரைவேட் பைலட் ட்ரைய்னிங் முடித்து கமர்சியல் பைலட் படிப்பு படிக்கஆரம்பித்தான்...அவன் படிக்கும் பிளையிங் பள்ளிக்கு செல்லலாம் என முடிவெடுத்து நான் கணவர் மகள் மூவரும் சென்றோம்...சவுத் ஆப்ரிக்கா வில் மகன் படிக்கும் பள்ளியில் முதல்முறையாக அவரை தனது பிளைட்டில் அமர வைத்து மகன்ஓட்டிய போது அவர் அடைந்த மகிழ்சிக்கு அளவே இல்லை....மேலும் அவரை மகிழ செய்தது அங்கு எல்லோரும் மகனை இவரது பெயரை சொல்லியே அழைகின்றனர்....அங்கெல்லாம் தந்தை பெயரை சொல்லியே அழைகின்றனர்....எங்கேயோ ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்து ஆட்டோ ஓட்டுனராக வாழ்வை தொடங்கிய தாமு என்கிற பெயர் கடல் கடந்து சென்று ஒரு பள்ளியின் வரவேற்பறையில் உள்ள ஒரு புகைபடத்தில் vicky damu என்று இருந்ததை பார்த்த பொழுது அவர் பிறவிபயனை அடைந்தது போல பெருமிதமானார்.......தொடரும்
 — remembering someone very special with Saidai Damu.
வெள்ளிவிழா (october 3/2016


) சிறப்பு பதிவு 22
TIME TRAVEL

2012....மகனுக்கு சிறுவயதில் இருந்தே பைலட் ஆக வேண்டும் என்று விருப்பம்....வெளிநாட்டில் படிக்க வேண்டும் என்று சொன்ன உடனே அவருக்கு அதில் விருப்பம் இல்லாமல் போய்விட்டது...எல்லா இடங்களிலும் நானும் மகனும் மட்டுமே சென்று விசாரித்து கொண்டு வந்தோம்...அவர் அதில் ஆர்வம் காட்டவே இல்லை....முடிவாக சவுத் ஆப்ரிக்கா சென்று படிப்பது என்று முடிவாகி விட்டது....விசாவிற்கு வேண்டிய ஏற்பாடெல்லாம் கவனித்தோம்...பணம் கொடுப்பதை தவிர வேறு எதுவும் அவர் செய்யவில்லை....ஒருவழியாக விசாவும் வந்தது...அதை பார்த்ததும் அவர் கண்களில் கண்ணீர்....எனக்கும் மகனுக்கும் ஒன்றும் புரியவில்லை...கொஞ்சம் நிதானித்ததும் விசா கிடைக்க கூடாதென்று எல்லா கடவுளிடமும் வேண்டி கொண்டு இருந்தாராம்....இதை கேட்டதும் மகனுக்கும் எனக்கும் சிரிப்பதா அழுவதா என்று புரியவில்லை...பின் ஒருவழியாக அவரை சமாதானப்படுத்தி மகன் கிளம்பினான்...மகனை பிரிந்து ஒரு மாதம் மிகவும் கஷ்டப்பட்டார்....எந்நேரமும் வீடியோ கால் போன்கால் என்று பேசி பேசி ஒருவழியாக சமாதானம் ஆனார்.........தொடரும்
 — remembering someone very special with Saidai Damu.
வெள்ளிவிழா (october 3/2016


) சிறப்பு பதிவு 21
TIME TRAVEL

2011.........எங்களுக்கு இருபதாவது கல்யாண ஆண்டு...எங்கள் திருமணம் நடந்த கோயிலின் பெயர் கூட எனக்கு தெரியாது...எங்கள் திருமணத்தின் போது புகைப்படம் கூட எடுக்கவில்லை.... பிறகு கடந்து போன இருபது வருடமும் அந்த கோவிலோ அந்த இடமோ என் நினைவில் இல்லை...இருபதாவது வருட திருமணநாளில் அந்த கோயிலுக்கு சென்று பார்க்க வேண்டும் என விரும்பினேன்....அதனால் செய்யூர் சூனாம்பேடு என்கிற இடத்தில இருக்கும் தீப்பாஞ்சம்மன் என்ற அந்த கோயிலுக்கு அழைத்து சென்றார்...முதல்முறை இந்த கோயிலுக்கு வரும் போது பயமும் குற்றஉணர்வும் மனக்குழப்பமும் நிறைந்திருந்தது....அத்தனை வருடம் கழித்து போனபோதுஅந்த கோயிலும் அதை சுற்றி உள்ள இடத்தையும் பார்த்ததும் ஒரு ஆத்மார்த்த அமைதி சூழ்ந்தது இருவருக்குள்ளும்....... to be continued. ...
 — remembering someone very special with Saidai Damu.
வெள்ளிவிழா (october 3/2016


) சிறப்பு பதிவு 20
TIME TRAVEL

2010....எனக்கு பயணங்கள் மிக பிடிக்கும் ...ஆனால் அவர் பயணங்களையே விரும்பாதவர்...வீடு தான் சொர்க்கம் அவருக்கு ...திருமணம் ஆகி பல வருடம் கழித்து தான் பயணங்கள் எனக்கு பிடிக்கும் என்பதை அவருக்கு புரிய வைத்தேன்...அதற்கு பின் சில பயணங்கள் போனதும் அவருக்கும் அதில் ஆர்வம் வந்து விட்டது...நிறைய பயணங்கள் செய்ய ஆரம்பித்தோம்...அப்படி போன ஒரு பயணத்தில் தான் மிக பெரிய விபத்து நடந்தது ...ஏற்காட்டில் இருந்து இறங்கி வரும் வேளையில் வாகனம் கவிழ்ந்து பள்ளத்தில் விழ வேண்டிய வண்டி சிறிய தடுப்பினால் தடுக்கப்பட்டு உயிர் பிழைத்தோம் ,,,அன்று எனக்கும் மகனுக்கும் காயம் பட்டது...அவருக்கும் மகளுக்கும் காயம் எதுவுமில்லை...அன்று அவர் தோளில் என் கைபையை மாட்டி கொண்டு எங்களுக்கு அடிபட்டதை தாங்க முடியாது பரிதவிப்போடு என்னுடனே அலைந்தது மனதில் உறைந்த சித்திரத்தில் ஒன்று .....தொடரும்
 — remembering someone very special with Saidai Damu.
வெள்ளிவிழா (october /20163) சிறப்பு பதிவு 19
TIME TRAVEL 

2008 ..2009..சில வியாபாரம் பெரிய அளவில் வெற்றியை தேடி தரும்....12 வருடங்கள் அவர்நடத்திய கடை வருமானத்தை விட ரியல் எஸ்டேட் வியாபாரம் அதிகபட்ச முன்னேற்றத்தை தந்தது....1998 சிறியதாக கட்டி குடியேறிய வீட்டை கொஞ்சம் விரிவு படுத்தி பெரிய அளவில் கட்டினார்....

திருமணம் ஆன புதிதில் இந்த வீடு தேடி வந்த அவரை அவரது தந்தை வீட்டிற்குள் நுழையவே கூடாது என்று கட்டை எடுத்து கொண்டு அடிக்க ஓடி வந்தார்.....17 வருடங்கள் கழித்து ஆறு பேருக்கு சொந்தமான அந்த வீட்டினை சகோதர சகோதரிகள் அனைவருக்கும் அவர்களுக்கான பங்கினை கொடுத்து அப்பா வீட்டை தனது சொந்த முயற்சியினால் தனது வீடாக்கினார்..........தொடரும் — remembering someone very special with Saidai Damu.

வெள்ளிவிழா (october 3) சிறப்பு பதிவு 18
TIME TRAVEL

2007...வியாபாரமும் வாழ்கையும் நல்லபடியாகவே போனது....நிறைய பயணம் செய்ய ஆரம்பித்தோம்...முன்பெல்லாம் கடையை விட்டு வர முடியாததால் எங்கும் போவது அரிதாக இருந்தது...கடை மூடியதும் வீட்டில் இருந்தே வியாபாரம் செய்ததால் அனைத்தையும் போனிலேயே முடிக்க ஆரம்பித்தார்..... பயணங்கள் அதிகமாயின....

பிள்ளைகள் விஷயத்தில் அவர் அப்படியே சந்தோஷ் சுப்பிரமணியம் பிரகாஷ்ராஜ் தான்....பிள்ளைகளுக்கும் சேர்த்து இவரே எல்லாவற்றையும் யோசிப்பார்....99% சுதந்திரம் கொடுத்திருந்தாலும் 1% கண்டிப்பால் தன் கட்டுக்குள்ளே வைத்திருப்பார் பிள்ளைகளை .....மகன் வெளிநாடு போனபிறகும் காலை முதல் இரவுவரை பேசிக்கொண்டே இருப்பார்... அப்பா எந்த நிமிடம் போன் செய்வார் என்பது மகனுக்குஅத்துபடி...அப்பாவுக்கும் மகனுக்கும் அப்படி ஒரு அலைவரிசை....மகளாவது கொஞ்சம் சுயம் பேசுவாள் ...மகன் அப்பா நினைத்ததை மட்டுமே பேசுவான்....அப்படி ஒரு நெருக்கம் அவர்களுக்குள்....மகளுக்கு என்னிடம் தான் நெருக்கம் ....பிள்ளைகள் எப்போதும் அருகிலேயே இருக்க வேண்டும் அவருக்கு...எங்களுக்குள் ரகசியங்கள் என்று எதுவுமில்லை....எல்லாவற்றையும் டிஸ்கஸ் பண்ணுவோம் .....தொடரும்
 — remembering someone very special with Saidai Damu.

வெள்ளிவிழா (october 3/2016


) சிறப்பு பதிவு 17
TIME TRAVEL

2006......ரியல் எஸ்டேட் வியாபாரம் மிக நல்லமுறையில் தொடர ஆரம்பித்தது...அவருக்கு அந்த துறை, வாழ்வில் நல்ல முன்னேற்றத்தை தந்தது....மிக மும்முரமாக வியாபாரம் செய்து சம்பிதிக்க தொடங்கினார்.....

அவரது குணத்தை பற்றி எளிய வகையில் சொல்ல வேண்டும் என்றால் நாசர் சார் நடித்த எம்டன்மகன் போன்ற குணம்....முன்கோபம் .ஈகோ.உறவுகளை தூக்கி அடிக்கும் மூர்க்க குணம்,சுயநலம் இதெல்லாமும் உண்டு....ஆனால் அந்த படத்தின் இறுதியில் வருவது போல் இவரின் வாழ்வே எங்களுக்காக என்பதில் அவை எல்லாம் தூசியாகிறது ...பாகற்காய் சாப்பிட்டதும் அதன் சுவையை யாரும் நாக்கிலேயே வைத்து கொள்ள விரும்புவதில்லை...உடனே ஒரு ஸ்பூன் சர்க்கரை போட்டு அதை மறக்கடித்து விடுவோம்...அது போல் இவரது கசப்புகளை மறக்க செய்வது எங்கள் மேல் அவருக்கு உள்ள அன்பு...அவரது கோப புயலில் ஒடிந்து போக நானொன்றும் மூங்கில் இல்லை...வளைந்து நிமிரும் நாணல்.... ஏனெனில் எங்கள் மூவரை தவிர வேறு உலகமே இல்லை....இது அவரை சுற்றி உள்ள நண்பர்கள் உட்படஅனைவர்க்கும் தெரியும்...ஒரு நிமிடம் கூட எங்கள் நினைவுகளை மட்டும் அவர் விடுவதே இல்லை.....அவரது உலகம் நாங்கள் தான் என்பது எங்களுக்கு தெரியும்...பிள்ளைகள் விஷயத்தில் அவர்.....தொடரும்
 — remembering someone very special with Saidai Damu.
வெள்ளிவிழா (october 3/2016) சிறப்பு பதிவு 16
TIME TRAVEL

2005....ட்ராவல்ஸ் பிசினஸ் கொஞ்சம் கடினமான பணி என்பது சிறிது காலத்தில் புரிந்தது....இவரது கோப குணத்திற்கு அது ஒத்துவரவில்லை....எனவே ஒரு வருடத்திற்குள்ளாகவே அதை மூடும்படி ஆயிற்று.....ரியல் எஸ்டேட் துறையும் அரசியலும் இன்று வரை தொடர்கிறது.....

கணவன் மனைவி உறவில்திருமணம் ஆன உடனே ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது என்பது இயலாத காரியம்....என் காதலில் எனக்கு திருமணம் ஆகும் போது இப்போது பிள்ளைகள் யோசிக்கிற அளவிற்கு எல்லாம் எனக்கு வாழ்கையை பற்றிய அறிவில்லை....காதல் என்றால் காதல் அவ்வளவு தான்....அதன் பின் வருகிற வாழ்வை பற்றி சிந்திக்கும் முன்னரே திருமணம் ஆகி விட்டது....திருமணம் ஆன புதிதில் இருந்தே அவருக்கு எப்படி பணம் சம்பாதிப்பது என்றும் எனக்கு புது உறவுகளின் பற்றிய சிந்தனையும் என காலம் போனது உடனே மகன் பிறந்தான் அவனை வளர்க்க வேண்டிய பொறுப்பு....அதன் பிறகு மகள் அவளுடன் கழிந்த காலங்கள்....இவர் கடையை மூடி பிள்ளைகளும் சற்று வளர்ந்த பிறகு தான் எங்களுக்குள் மிக புரிதல் உண்டாயிற்று....அவரது குணம் எப்படி என்றால்.....தொடரும்
 — remembering someone very special with Saidai Damu.

வெள்ளிவிழா (october 3/2016) சிறப்பு பதிவு 15
TIME TRAVEL
2004......என்றுமே வளர்ச்சியில் துணை நிற்காதவர்கள் விமர்சனம் செய்வதில் மட்டும் முதலில் நிற்பார்கள்....இவர் கடை மூட முடிவெடுத்ததும் எல்லோரும் அதை மூட வேண்டாம் எனறு அறிவுரை சொல்ல ஆரம்பித்தனர்.....கடன் வாங்கி முதலீடு செய்யலாம் என்று சொன்னார்கள்....ஆனால் மிக பெரிய முதலீட்டுடன் தொடங்கிய ஒரு வியாபாரத்துடன் கடன் வாங்கி மோத முடியாது என்று முடிவெடுத்து கடையை மூடி விட்டார்....அடுத்து என்ன செய்வது என்று தயங்கி யோசிக்க நேரமில்லா வகையில் மகனும் மகளும் வளர்ந்து விட்டனர்....மகன் பெயரில் டிராவல்ஸ் ஆரம்பித்தார்....கூடவே ரியல் எஸ்டேட் பண்ணவும் அரசியலில் ஈடுபடவும் ஆரம்பித்தார்...வீட்டு செடி என்றால் எவேரேனும் நீர் விட்டு வளர்க்க வேண்டும் இவர் தன்னிச்சையாக வளரும் காட்டு மரம்...அந்த துறைகளிலும் விரைவில் காலூன்றி விட்டார்....தொடரும்
 — remembering someone very special with Saidai Damu.

சனி, 11 பிப்ரவரி, 2017

வெள்ளிவிழா (october 3/2016


) சிறப்பு பதிவு 14
TIME TRAVEL 

2003....வாழ்கைனா ஏற்ற இறக்கங்கள் இருக்காமல் இருக்குமா?..இவருக்கும் இறங்கு முகம் வந்தது...இவர் கடையின் அருகிலேயே மிக பெரிய அளவில் மொத்த வியாபாரமாக சிமெண்ட் ஹார்டுவேர் கடை ஒன்று ஆரம்பித்தார்கள்....அது வரை தனி ராஜாங்கமாக இருந்த இவரது வியாபாரத்தில் அடிவிழ ஆரம்பித்தது....அவர்கள் கொடுத்த விலையில் இவரால் கொடுக்க முடியாததால் வியாபாரம் சரிய ஆரம்பித்தது...எப்போதும் பரபரப்பாக இருந்த இவர் சோர்வடைய ஆரம்பித்தார்....கடையை தொடர்ந்து நடத்தி கொண்டு இருந்தால் நஷ்டம் அதிகமாகும் என்பதால் கடைகளை மூடி விட முடிவெடுத்தார்.....தொடரும் — remembering someone very special with Saidai Damu.
வெள்ளிவிழா (october 3/2016


)சிறப்பு பதிவு 13
TIME TRAVEL

2002 ....மகனும் மகளும் திருமதி லதா ரஜினிகாந்த் அவர்கள் நடத்தும் ஆஷ்ரம் பள்ளியில் படித்து கொண்டு இருந்தார்கள்....பாபா படம் அப்போது தான் தயாரிப்பில் இருந்தது..என் மகன் விக்கிககு அதில் ஒரு பாடலில் திரு ரஜினி அவர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது...முதல் பாடலில் நடித்தான்...

அந்த வருடத்தில் என்னவருக்கு கார் வாங்க வேண்டும் என்கிற விருப்பம் வந்தது...உடனே எதை வாங்குவது என்று யோசித்தோம்...சிறிய கார் வாங்கி நாம் மட்டுமே பயணிப்போம் என்கிற குறுகிய எண்ணம் எங்கள் இருவருக்குமே இல்லை,,,ஆகையால் பெரிய கார் வாங்கி எங்கு சென்றாலும் குடும்பத்தினர் அனைவருடனும் சேர்ந்து பயணிக்க விரும்பி குவாலிஸ் கார் வாங்கினார்,,,,
அன்றில் இருந்து இன்று வரை அவர் பிறந்த வீட்டினரும் சரி என் பிறந்த வீட்டினரும் சரிஅதிகளவு டூர் பயணித்தது இந்த காரில் தான்...முதலில் ஊட்டி, கேரளாவுக்கு செல்வதில் ஆரம்பித்தது எங்கள் பயணங்கள்......தொடரும்
 — remembering someone very special with Saidai Damu.
வெள்ளிவிழா (october 3/2016



)சிறப்பு பதிவு 12
TIME TRAVEL

2001....பையன் படிக்கும் ஆஷ்ரம் பள்ளியிலேயே ஐஷுவையும் சேர்த்தார்...விக்கி ஸ்கூல் போகணும்னாலே எப்பவும் அழுகை தான் ரொம்ப செல்லம்....ஐஷுவை முதல் நாள் பள்ளியில் சேர்க்கும் போது அழுகையை எதிர்பார்த்தே போனோம்....ஆனா அபியும் நானும் படத்தில் வர மாதிரி அவ திரும்பி கூட பார்காம போயிட்டாள்....நானும் அவரும் கண்கலங்கி திரும்பி வந்தோம்....
கல்யாணம் ஆன நாள் முதல் குடும்பத்தை இணைப்பதும் பணம் சம்பாதிப்பதும் மட்டுமே லட்சியமாக இருந்த நாங்கள் கொஞ்சம் வாழ்கையை ரசிக்கவும் ஆரம்பித்தோம்...
அம்மாக்களுக்கு பிள்ளைகள் மிக பெரிய பலம்...மனைவி வெளியில் போகணும்னு சொன்னால் மறுக்கிற கணவன் பிள்ளைகள் கேட்டதும் உடனே தலையாட்டுவார்கள்....அப்படித்தான் இவரும்...வெளியில் போவது என்றாலே இவருக்கு கசக்கும்...ஆனால் பிள்ளைகள் கேட்டதும் சினிமா பீச் என்று அவர்களுக்காக வர ஆரம்பித்தார்........தொடரும்
 — remembering someone very special with Saidai Damu.
வெள்ளிவிழா (october 3)சிறப்பு பதிவு 11
TIME TRAVEL 

2000....சிமெண்ட் பிசினஸ் நன்றாக போய்கொண்டிருந்ததால் அதை தொடர்ந்து ஹார்டுவேர் கடை தொடங்க முடிவு செய்து இதன் எதிரிலேயே புதியதாய் கடை ஒன்றை தொடங்கினார்....
குழந்தைகள் வளர்ச்சியை அருகில் இருந்து ரசிக்கும் பாக்கியம் எப்போதுமே அம்மாக்களுக்கு கிடைக்கும் அளவு அப்பாக்களுக்கு கிடைபதில்லை....
வியாபாரதில் கவனம் என்பதால் எப்போதும் பிஸியாக இருப்பார்...பிள்ளைகள் வளர ஆரம்பித்தனர்....பிள்ளைகளின் படிப்பு ,அவர் கடை என்று வாழ்கை ஒரு நேர்கோட்டில் சென்றுகொண்டிருந்தது..... — remembering someone very special with Saidai Damu.


வெள்ளிவிழா (october 3)சிறப்பு பதிவு 10
TIME TRAVEL 

1999...
மகளின் முதல் பிறந்தநாளை விமர்சையாக ஏற்பாடு செய்தார்....

இப்போதெல்லாம் வெளியில் சென்றால் ஒருமணி நேரத்திற்கு ஒரு முறையாவது போன் பேசி விடுவார்...அப்போது அதற்கான வசதி கிடையாது.....முதலில் பேஜர் வசதி வந்ததும் அதை வாங்கினார்...பின் முதன் முதலில் RPG செல் வந்ததும் அதை வாங்கினார்...வீட்டில் லேன்ட் லைனுக்கு செல்லில் இருந்து பேசி கொண்டே இருப்பார்...எப்போதும் எங்களை விட்டு எங்கேயும் தனியே செல்லவே மாட்டார்...இது வரை தனியாக நண்பர்களுடன் டூரோ வெளிநாடோ சென்றது இல்லை...அவர்க்கு குடும்பம் தான் எல்லாமே...தொடரும் — remembering someone very special with Saidai Damu.



வெள்ளிவிழா (october 3/2016


)சிறப்பு பதிவு 9
TIME TRAVEL

1998 ....சில விஷயங்கள் நாம் எதிர்பாராமல் நமக்கு கிடைக்கும்,....சில விஷயங்கள் நாம் வேண்டி விரும்பி அதன்பால் கிடைப்பது அப்படி கிடைத்த ஒன்று எங்கள் செல்ல மகள்...

மகள் பிறந்த நேரம் புதிய வீடு கட்ட ஆரம்பித்தார்...மாடியிலேயே அருகில் .இருக்கும் இடத்தில யாருடைய ஆலோசனையும் இல்லாமல் தன் விருப்பப்படிவீடு கட்டினார்.... புதிய வீட்டில்மொ மகளின்ழி மழலை மொழி கேட்கவே வீடு தேடி ஓடி வருவார்...அதுவரை ஏசி அறையில் இருந்ததில்லை.... புதிய வீட்டில் ஏசி அறையில் அவர் புகைப்பிடிக்கும் பழக்கத்தால் அறையே புகையால் நிறைந்திருக்கும்...அப்போதெல்லாம்.கையில் சிகிரெட் இல்லாமல் அவரை பார்க்கவே முடியாது . மகள் இருக்கும் அறையில் புகை பிடிக்க முடியாத காரணத்தால் பால்கனியிலேயே நின்று புகைப்பார்....என் அப்பாவை போன்றே இவரும்செயின்ஸ்மோகர்.. மாமனாருக்கும் மருமகனுக்கும் எப்போதும் ஆறாம் விரலாய் சிகிரெட் இருக்கும் .....என் அப்பாவிற்கு புகை பழக்கத்தால் பக்கவாதம் வந்தது இவர் மனதை வெகுவாக பாதித்தது...தொடர்ந்து அவர் நண்பர் ஒருவர் புகையால் மரணம் அடைந்ததும் கேள்விப்பட்ட அந்த நிமிடம் கையில் இருந்த சிகிரெட் லைட்டர் இரண்டையும் மாடியில் இருந்து தூக்கி அடித்தார்..20வருடமாக கையில் இருந்த சிகிரெட்டை ஒரு நொடி முடிவில் துறந்தார்......இன்று வரை அதை தொடவில்லை....தொடரும்
 — remembering someone very special with Saidai Damu.