ஞாயிறு, 27 ஜூலை, 2014

பயணங்களின் பதிவுகள் ...(டெல்லி)

                2010 மே மாதம் டெல்லி சுற்றுலா சென்றிருந்தோம் ....சென்னை வெயில் எவ்வளவோ பரவாயில்லை .டெல்லி வெயில் உடலை எரிய வைக்கிறது வெயிலுக்கு இதமாக எல்லா இடங்களிலும் எலுமிச்சை ஜூஸ் விற்கிறார்கள் ..அதை குடித்து கொண்டே சுற்றி வருவதால் வெயிலை தாங்க முடிந்தது ...முதலில் பிர்லா மந்திர் சென்றோம்..தொழில் அதிபர் பிர்லா அவர்களால் கட்டப்பட்ட லக்ஷ்மி நாராயணன் கோவில் அழகான வெண்மை நிறத்தில் படிகளும் உட்புற அலங்காரங்களும் அழகாக ஜொலிக்கிறது  ..மகாத்மா காந்தி அவர்களால் முதல் பிரவேசம் செய்ய பட்டதாம் இந்த கோவில்  ...அடுத்து பாராளுமன்றம் எப்போதும் தொலைகாட்சியில் பார்க்கும் அதை நேரில் பார்க்கும் பொழுது பரவசம் ஏற்பட்டது ...அடுத்து நேருவின் இல்லமாகிய தீன்மூர்த்தி பவன் சென்றோம் ..அவ்வளவு பெரிய மாளிகை இப்போது ஒரு அழகிய அருங்காட்சியகமாக இருக்கிறது ...இந்திராகாந்தி இல்லத்தில் அவர்கள் பயன்படுத்திய படுக்கை ,டைனிங் டேபிள் ,சோபா ,புத்தக அலமாரி அனைத்தும் அப்படியே பாதுகாக்கப்பட்டு வருகிறது,பல்வேறு சமயங்களில் எடுத்த புகைப்படங்களின் தொகுப்புகள் உள்ளது ...அந்த இரும்பு பெண்மணி இறுதியாக உடுத்தி இருந்த புடவை குண்டுகள் துளைத்து ரத்தகறை படிந்த நிலையில் காட்சிக்கு வைக்கப்படுள்ளது ....அவர் நடந்து செல்லும் போது சுடப்பட்ட இடத்தை கண்ணாடி பாதை அமைத்து காட்சியாக்கி உள்ளனர்..அடுத்து ராஜீவ் காந்தி அறையினில் அவர் பயன் படுத்திய பொருட்கள் ,அவரின் பைலட் லைசென்ஸ்,அவர் காலணி அவற்றுடன்  அவரின் இறுதியாக குண்டு வெடிப்பின் பொது உடுத்தி இருந்த  உடை கந்தலாக வைக்கபட்டுள்ளது .... அதை பார்க்கும் யாவர்க்கும் கண்கள் கலங்கும் ....அங்கிருந்து இந்தியா கேட் சென்றோம் முதலாம் உலகப்போரில் இறந்தவர்களின் நினைவாக கட்டப்பட்டுள்ள பிரமாண்ட வாசலின்  கீழ் வீரர்களின் நினைவாக அணையா தீபம் எரிந்து கொண்டு இருக்கிறது....அடுத்து குதுப்மினார் சென்றோம் குத்புதீன் ஐபக் என்பவரால் கட்டப்பட்ட மிக உயரமான அழகான கட்டிடம் ..இதன் மேல் இருந்து சுற்றுபுறங்களை எளிதில் கண்காணிக்க முடியும்...முன்பெல்லாம் சுற்றுலா வருபவர்களை அனுமதித்ததாகவும் ஏதோ ஒரு விபத்து நடந்த பிறகு அதை நிறுத்தி விட்டதாகவும் சொல்கின்றனர்....அதன் அருகில் உள்ள இரும்பு தூண் மிக பழமை மிக்கதாக கூறபடுகிறது...வெயிலிலும் மழையிலும் துரு பிடிக்காமல் புதிது போலவே நிற்கும் இந்த தூண் உலகத்தாரை அதிசயப்பட வைக்கிறது ......








 தொடரும் ......

வியாழன், 3 ஜூலை, 2014

பயணங்களின் பதிவுகள் (அந்தமான் பாகம் 3)

பாராடாங்...நாங்கள் அன்று செல்லவிருந்த தீவின் பெயர் ..அதற்கு விடியற்காலை 3.30 மணிக்கே கிளம்பி தயாராக இருக்க சொன்னார்கள் ..வண்டி வந்ததும் கிளம்பி 100 கிலோ மீட்டர் பயணம் செய்தோம்..காலை 6 மணிக்கு முன் அங்குள்ள கண்டோன்மென்ட் சென்று பதிவு செய்து வரிசையில்  காத்திருக்க வேண்டும் ,எல்லா வண்டிகளுக்கு முன்பும் பின்பும் காவல்துறையினர் வருகின்றனர் ..அதிகபட்ச  வேகம் 40 அதற்கு மேல் போக கூடாது ,நமக்கு முன் செல்லும் போலீஸ் வழியில் நிற்கும் ஆதிவாசிகளை காட்டுக்குள் அனுப்புகின்றனர்...பின் வரும் போலீசும் ஆதிவாசிகள் வருகின்றார்களா என்று கண்காணித்து கொண்டே வருகின்றனர்.. அதையும் மீறி அவர்கள் வெளியே வந்தாலும் நாம் அவர்களை புகைப்படம் எடுத்தாலோ, அவர்களுக்கு நாம் ஏதேனும் தின்பண்டங்கள் கொடுத்தாலோ  நம்மை அழைத்து செல்பவரின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்..போகும் வழி எங்கும் அடர்த்தியான மரங்கள் ,மிக அடர்ந்த காட்டின்  நடுவினில் பாதை பயணிக்கையில் மிக இனிமையாக இருக்கிறது ,பாராடாங் தீவில் இறங்கியதும் அங்கிருந்து ஒரு படகில் அழைத்து செல்கின்றனர்.அடர்ந்த மான்கூராவ் காடுகளின் வழியே படகு பயணிக்கிறது ,அடர்ந்த சிலந்தி வலையின் உள்ளே பயணிப்பது போல் அனுபவத்தை தருகிறது ,சென்று இறங்கியதும் மரபாலங்கள் மேல் சிறிது தூரம் நடந்து சென்று பின் காடுகளின் உள் வழியே  நடக்க தொடங்கினோம் ,வெகு தூரம் நடக்க வேண்டி உள்ளது போகிறவர்கள் தண்ணீர் தின்பண்டம் எடுத்து செல்வது நல்லது  ...முடிவில் லெமன் கேவ் என்னும் அரிய வகை குகை உள்ளது , தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பலகைகள் வைத்து அந்த இடத்தை பற்றி விவரங்களை விளக்கி உள்ளனர்.எலுமிச்சை மரங்களின் வழியே வேரோடிய நீர் சுண்ணாம்பு பாறைகளில் பட்டு இந்த குகைகள் உருவானதாக சொல்கின்றனர் . குகையின் உள் பல வித தோற்றங்கள் நம் கண்னுக்கு தெரிகிறது .. குகையின் பக்கங்கள் பளிங்கு போல் மின்னி பல உருவங்களை காட்டுகிறது..உள்ளே சென்றதும் வேற்று கிரகம் சென்றது போல் உள்ளது..அதனுள் சிறிது நேரத்தை செலவிட்டு பின் மண் எரிமலை சென்றோம்,அதில் சகதி எரிமலை குழம்பு போல் கொதிக்கிறது ...இந்த  தீவு அந்தமான் செல்லும் அனைவரும் சென்று பார்ப்பது இல்லை .. ...சிறிது அதிக பணம் செலுத்த வேண்டி வரும் ஆனால் இதை பார்க்காமல் வருவது அந்தமான் பயணத்தை நிறைவு செய்யாது...........