அப்பாவை எழுப்ப சென்ற
படுக்கையறை மூலையில் ஒரு முத்து
தம்பியை படிக்க சொல்லி மிரட்டிய
அறையின் கோடியில் ஒருமுத்து
சமையலறையின் பரபரப்பில்
அம்மியின் பின் ஒளிந்த
ஒரு முத்து
வேலைக்காரியின் பின் அலைந்த
பொழுதினில் விழுந்த ஒரு முத்தென
வீடெங்கும் ஒளிந்து கிடக்கும்
அம்மாவின் கொலுசு முத்துக்கள்
அவளில்லா இப்பொழுதிலும்
இசைத்து கொண்டிருக்கிறது
அவளின் இருப்பை .....
படுக்கையறை மூலையில் ஒரு முத்து
தம்பியை படிக்க சொல்லி மிரட்டிய
அறையின் கோடியில் ஒருமுத்து
சமையலறையின் பரபரப்பில்
அம்மியின் பின் ஒளிந்த
ஒரு முத்து
வேலைக்காரியின் பின் அலைந்த
பொழுதினில் விழுந்த ஒரு முத்தென
வீடெங்கும் ஒளிந்து கிடக்கும்
அம்மாவின் கொலுசு முத்துக்கள்
அவளில்லா இப்பொழுதிலும்
இசைத்து கொண்டிருக்கிறது
அவளின் இருப்பை .....