சனி, 31 மே, 2014
புதன், 28 மே, 2014
இவள் அவளல்ல .....
"புன்னகை இல்லா இம்முகம் அவளுடையதில்லைகோபம் அவளது குணமில்லைபிறர் துயர் கடந்து நடந்திடும் மனதில்லை அவளுக்குஅந்தஸ்து பார்த்து நேசம் கொள்ளதெரியாது அவளுக்கு வெறுப்பாய் உமிழும் வார்த்தைகள் அவளுடையதில்லை" சுயம் மென்று தின்று கணவனின் பிம்பம் பிரதிபலிக்கும் இவள் அவளல்ல......
ஞாயிறு, 18 மே, 2014
மௌனப்பாறை
"உனக்கும் எனக்கும் இடையில்
மௌனம் அமர்ந்திருக்கிறது
ஒரு பாறையென"
"நீ விலக்க நினைக்கையில்நானும்
நான் விலக்கிட நினைக்கையில்
நீயும் இறுக்க பற்றி இருந்தோம் "
"இன்றிருவருமே தவித்திருக்கிறோம்
அப்பாறை உடைத்திட வழியின்றி"
"காலம் கடந்து கொண்டிருந்தாலும்
காத்து கொண்டிருக்கிறோம் "
என்றேனும் ஒரு நாள்
அப்பாறை சிறகு முளைத்து
தானாய் பறக்குமென .....
ஞாயிறு, 11 மே, 2014
அன்னையர் தின வாழ்த்துக்கள்
அவள் மட்டுமே அறிவாள்
"பிள்ளைகளின் புன்னகைக்கு
பின்னே மறைத்திருக்கும்
வருத்தங்களை "
"சிரித்த முகத்தினுள் புதைதிருக்கும்
சோகங்களை"
"மனதில் புதைதிருக்கும்
ரகசியங்களை "
"மனதில் புதைதிருக்கும்
ரகசியங்களை "
"பிறர் மேல் காட்ட இயலாத
கோபங்களின் சுவடுகளை"
"தோல்விகளின் வலிகளை"
"தாங்கிட இயலா மனபாரங்களை"
"முகமூடியினுள் புதைந்திருக்கும்
பிள்ளைகளின் நிஜமுக தரிசனங்களை
அவள் மட்டுமே அறிவாள்"
அவள் தான்
அம்மா .........
வியாழன், 8 மே, 2014
பயணங்களின் பதிவுகள்( ஊட்டி )
சில வருடங்களுக்கு முன் ஊட்டி ஒரு சொர்க்கபுரி ,மலை ஏறும் வழி எங்கும் நிறைந்திருக்கும் தேயிலை தோட்டங்கள் பசுமையின் வழிநடத்தி நம்மை அழைத்து செல்லும் ..உடலை ஊடுருவும் குளிர் இறுக்க போர்த்தி கொள்ள சொல்லும் ...சூரிய வெப்பம் எவ்வளவு முயன்றாலும் நம்மை தாக்க முடியாமல் தோற்று போகும் ..இரவில் குளிர் வாட்டி விடும் ....அடுக்கி வைத்து போல் வளர்ந்து நிற்கும் தேயிலை தோட்டங்களின் இடையே நடப்பது அப்படி ஒரு சந்தோஷம் அளிக்கும்.....பொட்டானிக்கல் தோட்டம் புல்தரை பஞ்சு மெத்தை விரித்தது போல் பரந்து கிடக்கும் அனைவரும் அதில் உருண்டு புரண்டு விளையாடி உலகை மறப்பார்கள் ..கால்கள் புதைய அதில் நாள் முழுவதும் நடந்தாலும் களைப்பு என்பதே தெரியாது ... மிக உயர்ந்த சிகரம் தொட்டபெட்டா இதன் மேல் இருந்து பார்க்க டெலஸ்கோப் இருக்கும் அதன் வழியாக ஊட்டி குன்னூர் கோத்தகிரி இவற்றின் அழகை ரசிக்கலாம் ...ஊசியென குத்தும் குளிருக்கு இதமாய் சூடான சோளம் ,வேர்கடலை,சுண்டல் விற்பார்கள் .. நேரம் போவதே தெரியாமல் அங்கு அமர்ந்து இருப்பது மனதுக்கு அமைதியாக இருக்கும்...அடுத்து பைகாரா நீர்வீழிச்சி கரை புரண்டு ஓடும் தண்ணீரை காண்பது அவ்வளவு புத்துணர்ச்சியாக இருக்கும்..ஊட்டி படகு துறை குடும்பம் குடும்பமாக படகு சவாரி செய்வது என ஊட்டி நம்மை புதியதாய் பிறந்தது போல் உற்சாகமாக உணர வைக்கும் ...இதெல்லாம் ஒரு காலம் இன்றைய ஊட்டியின் நிலையே வேறாக உள்ளது எங்கு பார்த்தாலும் கட்டிடங்கள் ....எங்கேயாவது ஓரிரு இடங்களின் தான் தோட்டங்களை பார்க்க முடிகிறது ...பசுமையை அழித்து கட்டிடங்கள் ஆக்கி விட்டதால் வெப்பம் கொளுத்துகிறது ...பகல் பொழுது சூரியன் சுடுகிறது ...நாம் சென்னையில் இருகிறோமோ என்றே என்ன தோன்றுகிறது ...இரவிலும் குளிர் தாக்குவதில்லை ....அடைத்து வைத்து போல் மூச்சு முட்டுகிறது...எங்கு பார்த்தாலும் ட்ராபிக் மலை பாதை என்பதால் பயணத்திலேயே நேரம் வீணாகிறது ...பொட்டானிக்கல் தோட்டம் காய்ந்து போய் உட்கார இடம் இல்லாமல் சேறாக உள்ளது ...தொட்டபெட்டாவில் டெலஸ்கோப் பழுதாகி விட்டதால்எடுத்து விட்டார்கள் ...கழிப்பிடங்களில் தண்ணீர் வசதி இல்லை...நீர்வீழ்ச்சி என்ற பெயர் தான் உள்ளது அதில் தண்ணீர் இல்லை ...படகு துறையில் திறமை உள்ளவர்களுக்கே முன்னுரிமை ...மொத்தத்தில் மலைகளின் ராணி பாரம் தாங்க முடியாமல் மூச்சு திணறுகிறாள் ...அவளை சற்று இளைப்பாற விடுவோம்..... ஊட்டி செல்வதை தவிர்ப்போம் ....
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)