திங்கள், 25 ஆகஸ்ட், 2014

பயணங்களின் பதிவுகள் (வாகா எல்லை )

பயணங்களின் பதிவுகள் (வாகா எல்லை )

        எல்லைகளை கடப்பதே ஒரு சிலிர்ப்பான அனுபவம் ...திருத்தணி கடந்து எல்லையில் வரும் கோபுர சின்னத்தை காணமல் கடப்பது இல்லை...எந்த எல்லை கோடுகளும் தாண்டுகையில் ஒரு அனுபவத்தை தரும் ...தாண்ட முடியவில்லை என்றாலும் பார்க்கையிலே சிலிப்பை தருகிறது வாகா எல்லை .....இந்தியா பாகிஸ்தான் எல்லைகளை இணைக்கும் வாகா எல்லை பஞ்சாப்பில் உள்ளது ...இந்த எல்லையில் தினமும் காலை கொடி ஏற்றுவதும் ,மாலை வேளையில் கொடி இறக்குவதும் இருபுறமும்  திருவிழா போல் நடக்கிறது ..நாங்கள் சென்றது மாலை கொடி இறக்கும் பொழுது ...இருபுறமும் படி அமைத்து மக்கள் அமர்ந்து பார்க்க வசதி செய்து உள்ளனர் ..படி முழுவதும் மக்கள் கூட்டம்,நின்று கொண்டே பார்க்க வேண்டி இருந்தது ,அந்த புறமும் இதை போலவே படி அமைத்து உள்ளனர் ஆனால் அங்கு அவ்வளவு கூட்டம் இன்றி காலியாக இருந்தது..(இந்தியன் என்பதற்காக சொல்லவில்லை நிஜமாகவே அந்த புறம் கூட்டம் இல்லை) தேசபக்தி பாடல்கள் ஒளிபரப்பபடுகிறது ..ராணுவ வீரர்கள் மக்களை இணைத்து பாடவும் ஆடவும் உற்சாகப்படுத்துகின்றனர் ...நேரம் செல்ல செல்ல பாடலின் வேகமும் மக்களின் உற்சாகமும் அதிகரிக்கிறது ...தன்னை மறந்து மக்கள் ஆவேசத்துடன் வீரமுழக்கங்களை முழங்குகின்றனர்...பெண்கள் வயதை மறந்து மைதானத்தில் அந்த பாடல்களுக்கு ஏற்ப நடனம் ஆடுகின்றனர்...அது போலவே பாகிஸ்தான் வீரர்களும் அவர்கள் பாடல்களை இசைக்க விடுகின்றனர் ...இந்திய வீர்கள் அந்த பாடல்கள் நம் காதுகளில் விழாத வண்ணம் நம்மை உரத்த குரல்களில் பாட சொல்லி தூண்டுகின்றனர் ..மக்களும் வெறி வந்தவர்கள் போல் அதிகபட்ச தொனியில் பாடுகின்றனர்...தேசியக்கொடியை பிடித்து கொண்டு பெண்களும் சிறுமிகளும் நடை போடுகின்றனர்...எனது அம்மா அப்படி கொடி பிடித்து நடந்த போது எடுத்த புகைப்படத்தை  மிக பெருமையாக காட்டுவார்....கொடி இறக்கும் நேரம் வந்ததும் வீரர்கள் அணிவகுத்து செல்கின்றனர் ..பாகிஸ்தான் வீர்களும் அது போலவே அணிவகுத்து வீர நடை போட்டு வருகின்றனர் ...இருவரும் நேருக்கு நேர் சந்தித்து , கால் முட்டி கழுத்து அருகில்  தொடுவது போல் ஓங்கி மிதித்து சல்யூட் அடிக்கின்றனர் ...பார்க்கும் மக்கள் மிக உணர்ச்சி வசப்படும் வகையினில் இருக்கிறது ...இருபுறமும் ஒரே நேரத்தில் கொடி இறக்கப்பட்டு மடித்து ராணுவ மரியாதையுடன் கொண்டுவரப் படுகிறது ......அங்கிருந்து வெளி வரும் மக்களின் முகங்களில் பெருமிதமும் மனங்களில் வீரமும் தேசபக்தியும் நிறைந்து வருகின்றனர்.........வெளியில் கடைகளில் பாகிஸ்தான் ரூபாய் காசு ஆகியவை விற்கபடுகிறது .....ஞாபாகத்திற்காக சில நோட்டுகளை வாங்கி செல்கின்றனர்...கிரிக்கெட்டில் மட்டுமே தேசபக்தி காணும் நாம் ஒருமுறை இந்த எல்லை வைபவத்தை கண்டு வந்தால் அதை நினைக்கும் போதெல்லாம் தேசபக்தி பெறகும்....
......