திங்கள், 24 ஜூன், 2013

பயணங்களின் பதிவுகள் [ சவுத் ஆப்ரிக்கா 5}


    10 நாள் பயணம் தொடங்கினோம் முதலில் கேப்டவுன் போனோம்..சவுத் ஆப்ரிக்காவின் மூன்று தலைநகரங்களில் ஒன்றான கேப்டவுன் மிக அழகான ஊர் ...மிக சுத்தமான ஊரும கூட .நகரத்தில் நுழைந்ததும் முதலில் கண்ணில் படுவது டேபிள் மௌன்டென் என்னும் மலை ..அழகான மலை மேல் மேகத்தை வைத்து போல் இருக்கிறது,முதலில் வாட்டர் பிரண்ட் என்னும் இடத்திற்கு சென்றோம் ,அங்கு தான் ஆர்பர் உள்ளது, துறைமுகம் போல் இல்லாமல் பொழுதுபோக்கு இடம் போல் உள்ளது..மிக பெரிய ராட்டினம் ,குழந்தைகள் விளையாட்டு இடம், ஹோட்டல்கள் இருக்கிறது  .டச்சுக்காரர்கள் வந்த கப்பலை பார்வையிட வைத்திருக்கிறார்கள் ..இங்கே ராமேஸ்வரத்தில் தூக்கும் பாலம் உள்ளது போல் அங்கு நகரும் பாலம் அமைத்து இருக்கிறார்கள் ..படகு வரும் நேரத்தில் நகர்ந்து வழி விடுகிறது .கடந்ததும் திரும்ப பழைய இடத்திற்கு வந்து பொருந்தி விடுகிறது..அடுத்து டேபிள் மௌன்டன் மேல் கேபிள் கார் மூலம் சென்றோம் அருமையான அனுபவம் 1067 அடி உயரத்தில் சில்லென்ற மேகத்தின் ஊடே நடந்து சென்று மேலிருந்து கேப்டவுன் அழகை பார்க்க இரண்டு கண்கள் போதாது ...மலை,கடல் ,ஊர் மூன்றும் சேர்ந்து பார்க்கும் போது நிச்சயம் இயற்கையின் அதிசயத்தை வியக்காமல் இருக்க முடிவதில்லை ..











திங்கள், 17 ஜூன், 2013

பயணங்களின் பதிவுகள் {சவுத் ஆப்ரிக்கா 4 }

எங்களது மகன் முதன்முறையாக எங்களை அவனது பயிற்சி விமானத்தில் அழைத்து சென்றான்.அவன் அருகில் அமர்ந்து பயணம் செய்வது மிக வித்தியாசமாக இருந்தது .அருகில் உள்ள கிம்பர்ளே என்னும் ஊருக்கு அழைத்துசென்றான்.மேல் இருந்து பார்க்கும் போது அழகான வட்ட வடிவில் தெரிகிறது  விவசாய நிலங்கள்..தண்ணீர் பாய்ச்ச ஏதுவாக  வட்ட வடிவில் விவசாயம் செய்கிறார்கள் .கிம்பர்ளே வைர சுரங்கத்திற்கு பெயர்ப்பெற்ற ஊர்.அங்கு முன் காலத்தில் மனிதர்களாலே தோண்டப்பட்ட{MAN MADE HOLE} சுரங்கத்தை பார்த்தோம்...பிளெமிங் பறவை நிறைந்து இருந்த{FLEMING BIRD DAM} அணை பார்த்தோம்..நாம் கார் பார்கிங் செய்வது போல கிம்பர்ளே ரன்வேயில் விமானத்தை நிறுத்தி விட்டு அதற்கான பார்கிங் கட்டணத்தை செலுத்தி விட்டு ஊருக்குள் சென்றோம்.பெரிய மால்கள் உள்ளது எல்லா பொருட்களுமே விலை மிக அதிகமாக உள்ளது .அங்கு ஒரு ஹோட்டலில் சாப்பிட்டோம்.வெறும் உருளைகிழங்கு சிப்ஸ் கொஞ்சம் மீன் பச்சை காய்கறிகள் இது தான் மதிய உணவு ..மீன் வேண்டாம் என்றால் சிக்கன் மட்டன் பீப் அதுவும் பார்க்க பச்சையாகவே இருக்கிறது ...சாப்பாடே வேண்டாம் என்று மில்க்ஷேக் குடித்தேன்..பள்ளிக்கு திரும்பியதும் DJ வீட்டுக்கு சென்றோம்.மிருகங்களின் உடலை பாடம் செய்து வைத்துள்ளார்கள்.ஆஸ்ட்ரிச் மற்றும் மாட்டு பண்ணை வைத்து வளர்கிறார்கள் .எப்போதும் குளிராகவே இருப்பதால் மனதும் லேசாக இருக்கிறது ...மே மாதம் அதுவுமாய் வெயிலில் இருந்து தப்பித்து சில்லென்று இருந்தோம்.....










பயணங்களின் பதிவுகள் {சவுத் ஆப்ரிக்கா 3}

முதன்முறையாக என் மகன் எங்களை அவனது விமானத்தில் அழைத்து சென்றான்.அருகில் உள்ள கிம்பர்லே என்னும் ஊருக்கு போனோம்.அந்த இடம் வைர சுரங்கத்திற்கு பெயர் பெற்றது..இயந்திரத்தின் உதவி இன்றி மனிதர்களாலே தோண்டப்பட்ட வைரசுரங்கத்தை  பார்த்தோம்..இது (MAN MADE HOLE)என்று அழைக்கபடுகிறது..

வியாழன், 13 ஜூன், 2013

பயணங்களின் பதிவுகள் {சவுத் ஆப்ரிக்கா 3}

பஸ் நிற்கும் இடத்தில எல்லாம் ஆண்களும் அவர்களுக்கு நிகராக பெண்களும் இறங்கி சிகரெட் பிடிகிறார்கள்..பெண்கள் ஆண்களை சார்ந்து இருப்பது இல்லை ..4 மணிக்கு கிறிஸ்டியானா என்கிற இடத்தில இறங்கினோம்..அங்கிருந்து பள்ளிக்கு காரில் சென்றோம் ...அழைத்து செல்ல ஆலன் என்கிற நண்பர் வந்திருந்தார் .அவரும் அங்கு விமானம் ஓட்ட வந்து இருந்தார்.பள்ளி காடு போன்ற இடத்தில இருக்கிறது அங்கு பெரும்பாலோனோர் விமான பள்ளி நடத்துகிறார்கள் ..உலகின் பல இடங்களில் இருந்தும் இங்கு வந்து தங்கி பயிலுகின்றனர் ...என் மகனுடன் ஈரான் ,ஜெர்மனி,கென்யா,நாட்டை சேர்தவர்கள் தங்கி படிக்கின்றனர்..பள்ளியை சுற்றி பார்த்த நங்கள் அந்த பள்ளியை நடத்தும் குடும்பத்தினரை சந்தித்தோம்..சந்திகிறவர்களை கட்டி அணைத்து அன்பை வெளிபடுத்துகின்றனர் ..அந்த பள்ளியை நடத்தும் DJ வின் அம்மாவை எல்லோரும் மம்மி என்றே அழைகிறார்கள் ...மாணவர்களை மிகவும் அன்பாக கவனித்து கொள்கிறார்கள் ...பிளைட் எல்லாம் நிறுத்தி வைத்து உள்ள இடத்திற்கு போய் பார்த்தோம் ..4 பேர் 6 பேர் பயணம் செல்லும் பிளைட் எல்லாம் நிறுத்தி வைத்து இருகிறார்கள் ...மாணவர்கள் அதில் ஓட்டுவதருக்கு பயிற்சி எடுக்கிறார்கள் ..பள்ளியை சுற்றி பார்பதிலேயே இன்றைய நேரம் போனது .....



தொடரும்

திங்கள், 10 ஜூன், 2013

பயணங்களின் பதிவுகள் {சவுத் ஆப்ரிக்கா 2}


கவிதைகளின் பாதையில் இருந்து விலகி பயணங்கள் பற்றி எழுதி உள்ளேன் ...நண்பர்கள் படித்து விமர்சித்தால் மகிழ்வேன் .....அன்புடன் சுஜா .......


பயணங்களின் பதிவுகள் {சவுத் ஆப்ரிக்கா}  

  ஜோனஸ்பர்க் மிக குளிராக இருந்தது ..நண்பரின் வீட்டில் எங்களுக்காக சிக்கன் செய்து வைத்து இருப்பதாக மகன் சொன்னான் ,சாப்பிட சென்றோம் பிரட் ,வைத்து இருந்தார்கள்..முட்டையை பாதி வேக்காட்டில் வேக வைத்து .சிக்கனை இனிப்பாக செய்து இருந்தார்கள்...எனக்கு பிடிக்கவில்லை என்பதை பார்த்த என் மகன் இங்கிருக்கும் இருபது நாட்களும் இதை தான் சாப்பிட வேண்டும் என்று கூறினான்..அங்கு  அழகழகாய் பறவைகளை வளர்கிறார்கள்...நண்பரின் மனைவி புடவை கொண்டு வரவில்லையா என்று செல்லமாக கோபித்து கொண்டார்...இந்தியாவில் இருந்து வரும் நண்பர்களிடம் இனிப்பும் புடவையும் எதிர்பார்கிறார்கள்...மறுநாள் என் மகன் படிக்கும் பள்ளிக்கு கிளம்பினோம் . எதிர்ப்படும் அனைவரும் goodmorning,how r u என்று கேட்காமல் போவதில்லை...பஸ்ஸில் பயணித்தோம் .பாதையில் ஒரு மேடு பள்ளம கூட கிடையாது...பஸ்ஸில் காபி பிஸ்கட் தருகிறார்கள் ...ஒரு குலுக்கல் கூட இல்லாமல் காபி குடிக்கலாம் ,பஸ்சின் உள்ள டாய்லெட் வசதி உள்ளது...வெள்ளையர்கள் எல்லோரும் இன்முகத்துடன் இருகிறார்கள்...கருப்பர்கள் சிலர் அன்பாகவும் சிலர் சற்று கடுமையான முகத்துடனும் இருகிறார்கள் ....வெள்ளையர்கள் வாழ்வில் ஏற்றதுடனும் கருப்பர்கள் தாழ்ந்த நிலையிலும் இருகிறார்கள்...கருப்பர்கள் மட்டுமே தெருவில் நடக்கிறார்கள்..வெள்ளையர்கள் யாருமே நடப்பதில்லை,காரில் தான் செல்கிறார்கள்.ஏற்றதாழ்வினால் அவர்களுக்குள் எப்போதும் ஒரு பனிப்போர் நடந்து கொண்டு தான் இருக்கிறது......





தொடர்வேன்........

சனி, 8 ஜூன், 2013

பயணங்களின் பதிவுகள் {சவுத் ஆப்ரிக்கா}

இந்த ஆண்டு விடுமுறையில்  எனது மகன் படிக்கும் சவுத் ஆப்ரிக்கா நாட்டுக்கு பயணம் செல்ல முடிவெடுத்து நான் எனது கணவர் மகள் மூவரும் பயணித்தோம்..சென்னையில் இருந்து அபுதாபி அங்கிருந்து ஜோஹன்ஸ்பர்க்  போய் சேர்ந்தோம் ...பனிரெண்டு மணி நேர பயணம் ....36000 அடி உயரத்தில் பயணிக்கும் போதே நமக்கு கீழ்  பாலைவனங்கள் , மலைகள். பஞ்சுபோன்ற  மேகங்கள் தெரிகிறது , பார்க்கும் போதே கொள்ளை அழகாக உள்ளது ....ஜன்னல் வழியாக பார்க்க வேண்டிய அவசியமே இல்லாமல் நம் முன்னாடி உள்ள மானிட்டர் வழியாகவே பார்த்து கொண்டு வர முடிகிறது .....அங்கே போய் இறங்கியதுமே ஓர் லேடி கஸ்டம்ஸ் அதிகாரி எங்களை அழைத்து சோதனையிட்டார் ...எங்கள் மகனுக்காக கொண்டு சென்றிருந்த உணவு பொருட்களை கொண்டு செல்ல கூடாது என்று கூறினார்...அவ்வளவு உணவு பொருட்களை எடுத்து சென்று மகனிடம் சேர்க்க முடியாமல் போய் விடுமோ என்று கவலையுடன் விவாதம் செய்து கொண்டு இருந்த போது ஒரு முஸ்லிம் நண்பர் அவர்கள் பணத்தை எதிர் பார்கிறார்கள் 200 ரேண்டு கொடுத்தால் விட்டு விடுவார்கள் என்று சொன்னார் .நமது மதிப்பில் 1200 ருபாய் கொடுத்ததும் பேசாமல் அனுப்பி விட்டார்கள்....எங்கே போனாலும் ஊழல் இருக்கும் என்பது புரிந்தது .......அன்று இரவு எனது மகனின் நண்பர் வீட்டில்  தங்கினோம்.....

.தொடர்வேன்.....