வியாழன், 13 ஜூன், 2013

பயணங்களின் பதிவுகள் {சவுத் ஆப்ரிக்கா 3}

பஸ் நிற்கும் இடத்தில எல்லாம் ஆண்களும் அவர்களுக்கு நிகராக பெண்களும் இறங்கி சிகரெட் பிடிகிறார்கள்..பெண்கள் ஆண்களை சார்ந்து இருப்பது இல்லை ..4 மணிக்கு கிறிஸ்டியானா என்கிற இடத்தில இறங்கினோம்..அங்கிருந்து பள்ளிக்கு காரில் சென்றோம் ...அழைத்து செல்ல ஆலன் என்கிற நண்பர் வந்திருந்தார் .அவரும் அங்கு விமானம் ஓட்ட வந்து இருந்தார்.பள்ளி காடு போன்ற இடத்தில இருக்கிறது அங்கு பெரும்பாலோனோர் விமான பள்ளி நடத்துகிறார்கள் ..உலகின் பல இடங்களில் இருந்தும் இங்கு வந்து தங்கி பயிலுகின்றனர் ...என் மகனுடன் ஈரான் ,ஜெர்மனி,கென்யா,நாட்டை சேர்தவர்கள் தங்கி படிக்கின்றனர்..பள்ளியை சுற்றி பார்த்த நங்கள் அந்த பள்ளியை நடத்தும் குடும்பத்தினரை சந்தித்தோம்..சந்திகிறவர்களை கட்டி அணைத்து அன்பை வெளிபடுத்துகின்றனர் ..அந்த பள்ளியை நடத்தும் DJ வின் அம்மாவை எல்லோரும் மம்மி என்றே அழைகிறார்கள் ...மாணவர்களை மிகவும் அன்பாக கவனித்து கொள்கிறார்கள் ...பிளைட் எல்லாம் நிறுத்தி வைத்து உள்ள இடத்திற்கு போய் பார்த்தோம் ..4 பேர் 6 பேர் பயணம் செல்லும் பிளைட் எல்லாம் நிறுத்தி வைத்து இருகிறார்கள் ...மாணவர்கள் அதில் ஓட்டுவதருக்கு பயிற்சி எடுக்கிறார்கள் ..பள்ளியை சுற்றி பார்பதிலேயே இன்றைய நேரம் போனது .....தொடரும்

4 கருத்துகள்:

 1. அங்கு சிலது சர்வசாதாரணமாக இருப்பதை அறிந்தேன்... தொடர்கிறேன்...

  பதிலளிநீக்கு
 2. மகிழ்ச்சி. பார்த்த இடங்களை, தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
  வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 3. சேலை ரொம்ப சிம்ப்பிளா இருக்கே? வ்ழக்கமா அலப்பறை சேலைதானே கட்டுவீங்க? # சும்மா

  பதிலளிநீக்கு
 4. படங்கள் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி!!

  பதிலளிநீக்கு