வெள்ளி, 16 நவம்பர், 2018

பயணங்களின் பதிவுகள்  ( புனே& மும்பை 2018)2

     எல்லா கலாச்சார மக்களையும் ஒன்றாக கொண்ட சென்னையிலேயே வாழ்ந்து பழக்கப்பட்டதால் தனிப்பட்ட ஒரு சமூக மக்கள் வாழும் புனே போன்ற ஒரு சிறு  நகரத்தின்  வாழ்வு முறை சற்று வித்தியாசமாகவே தெரிகிறது....வேற்று மொழி பேசுபவர்களை இரண்டாம்பட்சமாக பார்க்கும் மனப்பான்மை இருக்கிறது அவர்களிடம்....பாராட்டப்படவேண்டிய முதன்மையான  விஷயம் மரங்கள்....நாம் சாலையின் நடுவில் செடி வளர்ப்பதை போலில்லாமல் மரங்களை வளர்க்கிறார்கள்....வேறு இடங்களில் இருந்தும் மரங்களை வேரோடு பெயர்த்து சாலையின் நடுவில் நடுகிறார்கள்...இதனால் நிழலும் குளிர்ச்சியும் சேர்ந்து பயணங்களை மிக இனிதாக்குகிறது ....பேருந்து   பயணம் செய்பவர்களுக்காக பாதையின் நடுவில் தனியாக ஒரு இடம் ஒதுக்கி அதில் இருக்கைகள் மின்விசிறி என ஏற்பாடு செய்து உள்ளனர் ...பயணிகள் நெரிசலில் அவதியுறாமல் எந்த சிரமமும் இன்றி பயணிக்கின்றனர்........ சாலைகளில்  முக்கியமானது  புனேவில் இருந்து மும்பை போகும் பாதை....மரங்களும்  மலைகளும், மலைகளை குடைந்து போடப்பட்ட நீளமான சுரங்கப்பாதைகளும்  என அழகிய பயணப்பாதையாக இருக்கிறது மும்பை புனே எக்ஸ்பிரஸ் வே .....இந்தியாவில் பயணிக்க வேண்டிய அழகான பாதைகளில் இதுவும் ஒன்று.... பாந்த்ரா வோர்லி  ஸீ லிங்க் பிரிட்ஜ் கடலின் நடுவில் கட்டப்பட்டு இருக்கும் இந்த பாலம் மும்பையின் போக்குவரத்து நெரிசலை குறைக்க கட்டப்பட்டுள்ள அழகிய கடல் பாதை ....இதில் பயணித்தது அருமையான அனுபவம்.....மும்பை நான்  பல வருடங்களாக பார்க்க நினைத்த நகரம்.....கமலின் நாயகன் படம் பார்த்த நாளில் இருந்தே மும்பை பார்க்க வேண்டும் என நினைத்திருந்தது இப்போது தான் நிறைவேறியது.....மும்பை (தொடரும்)
பயணங்களின் பதிவுகள்(புனே 2018) 1

மகனின் தலைதீபாவளி கொண்டாட சம்பந்தி வீட்டில் இருந்து அழைப்பு...சரி போறது தான் போறோம் அப்படியே பக்கத்தில் உள்ள இடங்களை பார்த்து விட்டு வருவோம் என ஒரு டூரும் பிளான் பண்ணி விட்டேன் ...ரயிலில் பயணம் போய் அதிக நாள் ஆகி விட்டதால் ரயிலில் போக முடிவு செய்தோம்...எனக்கு விமான பயணத்தை விட ரயில் பயணம் தான் பிடித்தமானது ....ரயிலை பார்த்தாலே ஆச்சி ஞாபகம் தான் வரும்...ஆச்சி முதல் முறையாக சிறுவயதில் ரயிலில் போனதும் ,வேகமாக பின்னோக்கி ஓடும் மரங்களை கண்டு நடுங்கி அலறி அழுத கதையை சுவாரசியமாக அபிநயத்தோடு சொன்னது எப்போதும் நினைவினில் வரும் ....முன்பை விட இப்போது ரயில் பெட்டிகளை மிக சுத்தமாகவே பராமரிக்கிரார்கள் ...மணிக்கொரு முறை பெருக்கி துடைகிறார்கள்...கொசுக்கடிக்கு ஹிட் ,கிளீன் பண்ண லைசால் என் நவீன மயமாகி விட்டது ...முன்பெல்லாம் பினாயில் மட்டுமே ....சம்பந்தி வீடு புனேயில் பிளாட் சிஸ்டம்...இது வரை பிளாட்டில் வாழ்ந்ததே கிடையாது....சென்னையில் வாடகை வீட்டில் வசித்து பின் அப்பா தனி வீடு கட்டி பின் திருமணம் முடிந்ததும் தனி வீடு...பிளாட் முறை வீட்டில் முதல் முறையாக பத்து நாட்கள் தங்கியது புது அனுபவம் ....பக்கத்து வீடுகளில் யார் இருக்கிறார்கள் என்பதே தெரியாமல் ஐநூறு குடும்பங்கள் சேர்ந்து வாழும் ஒரு இடம்....வெளியில் எட்டி பார்த்தாலே பத்து பேரை பார்த்து பழகிய மனதுக்கு வீட்டுக்குள் மட்டுமே சுழலும் பிளாட் வாழ்க்கை கொஞ்சம் மூச்சு முட்ட தான் செய்கிறது....தொடரும்



.பயணங்களின் பதிவுகள்






(ஊட்டி )..2018
ஊட்டி ......இரண்டு வருடத்திற்கு முன் மே மாதத்தில் சென்றிருந்த போது ஊட்டியின் நிலையை கண்டு மிக நொந்து போனேன்...எங்கு பார்த்தாலும் குப்பை,, பிளாஸ்டிக் கவர் ....சென்னை போல வெயில் ....இதனால் ஊட்டி போகும் ஆசை இல்லை என்றாலும் கேரளா பக்கம் போக முடியாததால் மீண்டும் ஊட்டி...ஆனால் இம்முறை [போனது அப்படி ஒரு ஏகாந்தமான அனுபவம் .....
ஊட்டி போக விரும்புபவர்கள் ஆகஸ்ட் இல்லை செப்டம்பர் மாதத்தில் போய் வாருங்கள் ....ஜனசந்தடி இல்லாத இடத்தில மெல்லிய சாரல்மழையில், மேகங்கள் நம்மை சூழ்ந்திருக்க நடுவில் சில்லென்ற குளிரில் புல்தரையில் நடப்பது வானத்தில் மிதப்பதை
போன்ற இனிமையான இன்பநிலை ....நான்கு முறை போயிருந்தும் இது வரை இப்படி ஒரு அழகான ஊட்டியை பார்க்கவில்லை .... அவ்வளவு சுத்தமாக அழகாக , பிளாஸ்டிக் பெரும்பான்மையாக ஒழிக்கப்பட்டு அழகாய் மேகம் போர்த்தி நின்றிருந்த மலைகளின் அரசியை பிரிந்து வர மனமே இல்லாமல் பிரிந்து வந்தோம் . .......தொடரும்

புதன், 10 அக்டோபர், 2018

பயணங்களின் அனுபவங்கள். ....(ஊட்டி)2018
ஒரு டூர் போய் பல நாள் ஆயிடுச்சு ...மகன் திருமண பிஸியில் ஒரு வருடம் எங்கேயும் போக முடியவில்லை...எங்கேயாவது போகணும் னு 
யோசிச்சுட்டு இருக்கும் போதே நாத்தனார் மகளின் திருமண அழைப்பு வந்தது .... புதன்கிழமை கல்யாணம் அறந்தாங்கி கரூர் நிலவளமுடையஅய்யனார் கோவில் என்னுமிடத்தில். ....அங்கிருந்து 40:கில் மீட்டர் மிமீசல் என்னுமிடத்தில் சத்திரத்தில் உணவு. ...அங்கிருந்து 20 கில் மீட்டர் தூரத்தில் தங்குமிடம். ...இந்த திருமணமே மிக பெரிய டூர் போல ஆகிவிட்டது. .. 
இதுவும் ஒரு புதுமையான அனுபவம் தான். ..நான்கு நாள் கழித்து ஞாயிறு அன்று தான் ரிஷப்ஷன்...மீதமுள்ள மூன்று நாட்கள் ஊட்டி போய் வர முடிவு செய்தோம். ...தொடரும்




புதன், 15 ஆகஸ்ட், 2018

திங்கள், 2 ஏப்ரல், 2018