பிறந்தநாள் எல்லோருக்கும் எப்போதும் வருவது தானே அதை என்ன கொண்டாடுவது என்பது என் கணவரின் கருத்து....திருமணம் ஆனா வருடத்தில் இருந்தே அவரது பிறந்தநாள் அன்று பரிசு குடுத்து அவரை அசத்துவது என் வழக்கம்...அவர் அதை பற்றி திட்டினாலும் பெரிதாக எடுத்து கொள்வது இல்லை ...பிள்ளைகள் வளர்ந்த பிறகு அவர்களும் அதையே பின்பற்றினார்கள்...இந்த வருடம் கணவரின் 50 வது பிறந்தநாள்... எப்போதும் போல முதலிலேயே சொல்லி விட்டார் பரிசு எதுவும் வாங்க கூடாது என்று ...நாங்களும் சரி சரி என்று தலையை ஆட்டி கொண்டோம்...இந்த பிறந்தநாளை விமர்சையாக கொண்டாட நானும் பிள்ளைகளும் ரகசிய திட்டம் தீட்டினோம்...முதலில் ஹோட்டல் ஒன்றில் பார்ட்டி ஹால் புக் பண்ணினோம்.. அவருக்கு தெரியாமல் நெருங்கிய உறவினர்கள் மற்றும் அவரது நெருங்கிய நண்பர்கள் என 50 பேர்க்கு அழைப்பு விடுத்தோம்...7 மணிக்கு எல்லோரும் பார்ட்டி ஹாலில் ஆஜராகி விட வேண்டும் என்றோம்.இந்த விஷயம் எந்த காரணம் கொண்டும் அவருக்கு தெரிந்து விட கூடாது என்பதை மட்டும் எல்லோருக்கும் சொல்லி விட்டோம்....எல்லோரும் வந்ததை உறுதி படுத்தி கொண்ட பிறகு வழக்கம் போல டின்னர்க்கு போகலாம் என்று அவரை அழைத்து கொண்டு கிளம்பினோம்...ஹோட்டல் அறையில் நுழைந்தவுடன் அனைவரும் ஒன்றாக சேர்ந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினார்கள் ...சில நிமிடங்களுக்கு அவருக்கு எதுவுமே புரியவில்லை ...மிக பெரிய இன்ப அதிர்ச்சியில் உறைந்து நின்ற அவரை தேற்றவே சிறிது நேரம் பிடித்தது...சர்ப்ரைஸ் எல்லோருக்கும் பிடித்த விஷயம் தானே...அவரும் அதை வெகுவாக ரசித்தார்...அவருக்கு மறக்க முடியாத 50 வது
பிறந்தநாள் கொண்டாட்டத்தை பரிசாக கொடுத்ததில் எனக்கும் பிள்ளைகளுக்கும் மிக்க மகிழ்ச்சி ......(கலந்து கொண்ட உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி )
பிறந்தநாள் கொண்டாட்டத்தை பரிசாக கொடுத்ததில் எனக்கும் பிள்ளைகளுக்கும் மிக்க மகிழ்ச்சி ......(கலந்து கொண்ட உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி )