வியாழன், 14 நவம்பர், 2013

சாம்பியா to இந்தியா

.மதியம் 3.15 சாம்பஸி ஆற்றின் மீது இரண்டு மணி   நேரம் ஆப்ரிக்கன் குயின் என்னும் பொழுதுபோக்கு படகில்  பயணித்தோம்...மதியம் தொடங்கிய பயணம் சூரிய அஸ்தமனம் வரை நீடித்து.,சூரியன் அஸ்தமித்தும் திரும்பி ஆரம்பித்த இடத்திற்கு வருகிறது.. முதலில் பயணம் சுவாரசியமாக இல்லை  ..இரு கரைகளிலும் யானைகள் குடும்பம் மற்றும் காண்டா மிருகம் ,ஒட்டகம் போன்றவற்றை பார்த்து கொண்டே செல்லலாம் ....படகில் ஏறியதில் இருந்தே எல்லோரும் குடிக்க ஆரம்பித்தனர் ஆண் பெண் பேதம் இல்லாமல் எல்லோரும் குடித்து கொண்டே வந்தனர்....அதற்கு துணையாக சிற்றுண்டிகளும் கொடுத்தனர் ...இலவசமாக எவ்வளவு வேண்டும் வேண்டுமானாலும் வாங்கி  கொள்ளலாம் ...நாங்கள் மூவர் மட்டும் குளிர்பானம் குடித்ததை பார்த்த அவர்கள் எங்களை  வேற்று கிரகவாசி போல்  பார்த்து சென்றனர்..அங்கு எங்களுடன் பயணித்த ஒரு பெண்மணி நாங்கள் குடும்பமாக வந்ததை பெரும் அதிசயமாக கேட்டார்..அவர் அவரது நண்பருடன் வந்திருந்தார்...வெகு தூரம் சென்ற பிறகு சூரிய அஸ்தமனம் தொடங்கியது அழகிய அந்த ஆறு  சூரிய ஒளியால் ஆரஞ்சு வண்ணத்திற்கு மாறியது ..பொன்னிறமாக மாறிய ஆற்றின் முடிவில் சூரியன் மறைய தொடங்கிய நேரம் எல்லோரும் 3,2,1 என எண்ண தொடங்கினர் பூஜ்யம் சொல்லியதும்  சூரியன் மறைவதும் ஒன்றாக இருந்தது...எல்லோரும் கை தட்டி ஆரவாரம் செய்தனர்...மிக இனிய அனுபவமாக இருந்தது..மீண்டும் கரைக்கு திரும்பியது படகு..மறுநாள் காலை அங்கிருந்து புறப்பட்டு ஜோன்ஸ்பர்க் வந்தோம்...என் மகன் பள்ளியில் பிராய் எனப்படும் இரவு விருந்தை கொண்டாடினோம்..நெருப்பு மூட்டி அதை சுற்றி அனைவரும் அமர்ந்து சந்தோஷமாக பொழுதை போக்கினோம்...எங்கள் மகனுடன் மீதி நாட்களை கழித்து விட்டு இந்தியா வந்து சேர்ந்தோம் ......











மனதிற்க்கினிய அனுபவங்களோடும் மகிழ்ச்சியோடும் இனிதே முடிந்தது எங்களது தென்னாப்ரிக்கா பயணம்......

வியாழன், 19 செப்டம்பர், 2013

சவுத் ஆப்ரிக்கா to சாம்பியா

சாம்பியா உலகின் மிக பெரிய நீர்வீழ்ச்சியான விக்டோரியா பால்ஸ் ஐ தன்னுளே வைத்து கொண்டு இருக்கும் ஒரு ஏழை நாடு ....ஜோன்ஸ்பெர்க் இல் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேசில் பயணித்து  இரண்டு மணி நேரத்தில் லிவிங்ஸ்டன் விமான நிலையம் சென்றடைதோம்..பதினெட்டு வயதுக்கு கீழ உள்ளவர்களுக்கு விசா எடுக்க வேண்டிய அவசியம் இல்லை அதனால் என் மகளுக்கு எடுக்கவில்லை...மகன் வர முடியாததால் நாங்கள் மூவர் மாட்டும் சென்றோம் ..ஏர்போர்ட் மிக சிறியதாக இருந்தது..அங்கிருந்து போகும் பாதையில் ஊர் மிகவும் காய்ந்து போய் ஒரு சுற்றுலா தளமாகவே தோன்றவில்லை..எங்கு பார்த்தாலும் ஏழை கறுப்பின மக்கள் தான் தென்பட்டனர்,அங்கிருந்து  சன் ஹோட்டல் சென்றோம்...சன் ஹோட்டலின் வாயிலில் கறுப்பின பழங்குடியினர் வரவேற்பு அளித்தனர்.. ஹோட்டல் மிக அழகாக அலங்காரம் செய்ய பட்டு வெளி உலகிற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லாமல் இருந்தது .சிறிது ஓய்வெடுத்து விட்டு பால்ல்ஸ் பார்க்க போனோம் ,அருவி ஆறாக ஓடி வரும் அழகினை பார்த்து விட்டு திரும்பி வந்து விட்டோம்...மிக ஆபத்து நிறைந்த இடம் ஆதலால் தனியாக செல்வது அபாயகரமானது ...மறுநாள் காலை எங்கள் கைடு வந்து எங்களை அழைத்து சென்றார் ,போகும் போது சாட்ஸ் மற்றும் ரப்பர் செருப்பு போட்டு கொண்டு வர சொன்னார் அவர் மழை கோட்கொண்டு வந்தார் ,அருவியை முதன்முதலில் வெளிஉலகிற்கு அறிமுகப்படுத்திய   டேவிட் லிவிங்ஸ்டன் பற்றி கூறினர் டேவிட் இந்த பகுதிக்கு வந்தபோது அதுவரை வெள்ளையர்களை பார்த்திராத கறுப்பின பழங்குடி மக்கள் அவரை பேய் என்று நினைதனராம் ,பிறகு அவருக்கு உணவளித்து அவர் உண்டதும் அவர் பேய் இல்லை என்று எண்ணினார்களாம்.பேய்கள் உணவு உண்ணாது என்பது அவர்கள் நம்பிக்கை.அவர்களுடன் நன்கு பழகிய அவர் தான் இந்த அருவியின் அழகினை வெளி உலகிற்கு தெரிவித்து உலகின் பார்வை இதன் மீது பட காரணமாக இருந்தவர் .  அவரது பெயரயே இந்த இடதிற்கு வைத்து விட்டனர். .அருவியின் முன்பக்கம் அழைத்து சென்றார் கைடு ..."ப்ப்ப்ப்ப்பா" வாழ்கையில் அழகு என்பதின் முழு அர்த்தம இன்று தான் பார்த்தோம் சொல்லில் வடிக்க  முடியாத அழகு ...அப்படிப்பட்ட அழகு ...நம் கண் முன்னே அருவி கண்ணுக்கெட்டும் தூரம் வரை கொட்டுகிறது ...மூன்று வானவில்கள் எப்போதும் தெரிகிறது ..நாம் மேலே இருந்து விழும் அருவியை கீழ் இருந்து அன்பவித்து ரசித்து இருப்போம் இது நம் கண் முன்னே கீழ விழுகிறது கீழே பட்டு தெறிக்கும் நீர் மேல் நோக்கி வந்து நம்மை நனைக்கிறது...பாசி படர்ந்த இரும்பு பாலத்தின் மேல் நடந்து செல்வது திகிலூட்டும் அனுபவமாக இருந்தது ..அந்த இடத்தை விட்டு வருவதற்கே மனது இல்லாமல் பிரிந்து வந்தோம் ....      










வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

பயணங்களின் பதிவுகள் [ சவுத் ஆப்ரிக்கா 10}

இன்று நாங்கள் சென்றது Bloukrans பிரிட்ஜில் பஞ்சி ஜம்ப் நடக்கும் இடத்திற்கு..உலகின் மிக உயரமான பஞ்சி ஜம்ப் பாலம் 708 அடி உயரம் உள்ள  அதன் மேல் இருந்து கால்களில் பலமான கயிறு ஒன்றின் மூலம் தலை கீழாக குதிப்பது இந்த விளையாட்டு...விளையாட்டு என்று சொன்னாலும் பார்க்கும் போதே வயிற்றில் பந்து உருளுகிறது ..என் மகன் விக்கி அதில் குதிக்க செல்ல ஆசை பட்ட போது பயம் இருந்தாலும் அவன் விருப்பதிர்க்காக சம்மதித்தோம் ..நேரில்  தெளிவாக பார்க்க முடியாததால் ஒரு அறையில் உள்ள தொலைகாட்சியில்  அதை கானொளி மூலம் ஒளிப்பரப்புகின்றனர்... குதித்து விட்டு திரும்பிய என் மகன் மிகவும் த்ரிலிங்கான அனுபவமாக இருந்ததாக சொன்னான் ..அங்கிருந்து போர்ட் எலிசபத் என்னும் ஊருக்கு வந்தோம் ...எங்கே சென்றாலும் தனியாக வெளியில் நடமாட முடிவதில்லை ..எங்கு சென்றாலும் வாகனத்தில் ஏறி பாதுகாப்பாக செல்ல வேண்டி இருக்கிறது..அங்கிருந்து மறுநாள் காலை ஜோன்ஸ்பர்க் வந்தோம் அங்கிருந்து "சாம்பியா" சென்றோம் ..சாம்பியா நமக்கு கிரிகெட் மூலம் அறிமுகமான "ஜிம்பாப்வே "வின் மிக அருகில் உள்ளது ..உலகின் மிக பெரிய அருவியான விக்டோரியா பால்ஸ் காண்பதற்கு சென்றோம் .. முதலில் ஜிம்பாப்வே செல்ல முடிவெடுத்து இருந்த எங்களுக்கு மே மாதம் ஜிம்பாப்வேவில் இருந்து பார்த்தால் தண்ணீர் அதிகமாக இருக்காது என்றும் சாம்பியாவில் இருந்து பார்ப்பது தான் அழகாக இருக்கும் என்று கூறியதால் அங்கு சென்றோம்..மகன் சவுத் ஆப்பிரிக்காவில் ஸ்டடி விசாவில் தங்கி இருப்பதால் அவனுக்கு விசா கிடைக்கவில்லை...மகளுக்கு அந்த ஊரிலேயே சென்று விசா எடுத்து கொள்ள சொல்லி விட்டார்கள் ..அதனால் நாங்கள் மூவரும் மட்டும் சென்றோம்...சாம்பியா ஒரு ஏழை நாடக இருந்தாலும் இறைவன் அந்த நாட்டிற்கு கொடுத்த மிக பெரிய அழகு பொக்கிஷம் விக்டோரியா பால்ஸ் ......





திங்கள், 29 ஜூலை, 2013

பயணங்களின் பதிவுகள் [ சவுத் ஆப்ரிக்கா 9}

     நைஸ்னா அழகிய சிறிய ஊர்(place of wood)...எங்கு பார்த்தாலும் பைன் மரங்கள் ..மரங்களின் ஊடே ஆங்காங்கே வீடுகளும் தங்கும் அறைகளும் உள்ளது.மர சாமான்கள் தயாரிப்பது தான் அங்கு முக்கிய தொழில்.அங்கு உள்ள யானைகள் சரணாலயம் போனோம்.உள்ளே செல்வதற்கு  முன் எல்லோரும் யானைக்கு 250 ருபாய் கொடுத்து சின்ன பக்கெட்டில் பழங்களை வாங்கி கொள்கிறார்கள் ,ஆப்ரிக்கா யானை நம்மூர் யானை போல் இல்லாமல் சாம்பல் நிறத்தில் பார்பதற்கு சிலை போலவே இருக்கிறது ..அதன் காதுகள் ஆப்ரிக்கா நாட்டின் மேப் போலவே இருக்கும் என்றார் எங்க கைடு ..வாங்கி வந்த பழங்களை எல்லோரும் யானைகளுக்கு கொடுத்தோம்..யானைகளும் அவற்றை ஆவலோடு தின்கின்றன ,அவற்றின் அருகில் நின்று புகைப்படம் எடுத்து கொண்டோம்.யானை தந்ததால் ஆனா பியானோ ,மற்றும் பல பொருட்களை கண்காட்சியாக வைத்து இருகிறார்கள் ...அதை பார்த்து விட்டு அடுத்து டிசிகாமா காடு  சென்றோம் ..நைசஸ்னா மற்றும் டிசிகாமா இரண்டு ஊர்களும்  இணைபில்லாமல் தனி தனியாக இருந்தது  அதன் மேல் ஒரு பாலம் போட்டதும் தான்  இரு ஊர்களும் இணைந்தனவாம் ...டிசிகாமா காட்டில் 1000 வருடத்து மரம் இருக்கிறது ...அதை ஒரு சுற்றுலா தளமாக்கி உள்ளனர்..அடர்ந்து பரந்து விரிந்துள்ள அந்த மரம் பார்க்க வியப்பாக உள்ளது ..இங்கு பைன் மரங்களை  அரசாங்கத்துடன் ஒப்பந்தம் போட்டு தனியார் வளர்கின்றனர் ..காட்டினுள் மரத்தினால் ஆன தாங்கும் அறைகள் அமைத்துள்ளனர் ...காட்டினுள் தங்கி இருந்தது புது விதமான அனுபவமாக இருந்தது ,,,,









தொடரும்...........

சனி, 20 ஜூலை, 2013

பயணங்களின் பதிவுகள் [ சவுத் ஆப்ரிக்கா 8}

இன்று அவுட்ஷ்ரோமில் உள்ள ஆஸ்ட்ரீச்(நெருப்புகோழி ) பண்ணைக்கு சென்றோம்.அதன் முட்டை ஓடு மிக பலமாக இருக்கிறது அதன் மேல் ஏறி நின்றாலும் அது உடைவதில்லை ..முன்பெல்லாம் அதன் இறகுகள் தங்கத்திற்கு இணையாக விற்பனை ஆகியதாம்..வெள்ளையர்கள் அதை அணிவதில் மிக பெருமை கொண்டார்களாம்..உலக போருக்கு பின் ஏற்பட்ட பணப் பற்றாக்குறையால் இறகு வாங்குவதை நிறுத்தியதால் அந்த தொழில் நசிந்து விட்டதாம் .. அடுத்ததாக காங்கோ கேவ்ஸ் சென்றோம்..மிக பிரமாண்டமாய் இருக்கிறது , 2000 ஆண்டுகளாக தன்னால் உருவான அந்த குகையை அழகாக அலங்காரபடுத்தி உள்ளனர்..உள்ளே செல்ல ஒருவருக்கு 540 ரூபாய் வசூல் செய்கின்றனர் ஒவ்வொரு குரூப் ஆட்களுக்கும் ஒரு கைடு வந்து அழகாய் விளக்கம் அளிக்கிறார்.பொறுமையாகவும் அன்பாகவும் பேசுகின்றனர் ..டிப்ஸ் கொடுத்தாலும் மறுத்து விடுகின்றனர் ..குகையின் உள்ளே சிறிது தூரம் மட்டுமே செல்ல முடிகிறது அதன் பிறகு உள்ள இடங்களில்  ரிஸ்க் எடுப்பவர்கள் மட்டுமே செல்லலாம்  என்பதால் நாங்கள் செல்லவில்லை ..ஆங்காங்கே மின் விளக்கின் ஒளியில் அந்த குகை பார்ப்பதற்கு ஆங்கில படங்களில் புதையல் தேடி செல்லும் இடம் போல் இருக்கிறது ...மூச்சு விட சிறிது சிரமமாக உள்ளது ..அங்கிருந்து ஜார்ஜ் சென்றோம் மிக அழகான ஊர் மலை அதன் அருகில் கடல் அதை ஒட்டியே வீடுகள் அங்கு வசிபவர்கள் மிக அதிர்ஷ்டசாலிகள் இயற்கையின் அழகை எல்லாம் ஒருசேர அனுபவிக்கிறார்கள்  ...ஜார்ஜ் பென்னிட் என்பவர் தனது அழகான மனைவியை காதலனிடம் இருந்து பிரித்து சிறை வைக்க 1850 ல் கண்டுபிடித்த அழகிய இடம் ..மனைவியை காண வந்த அவனது தலையை வெட்டி விட்டதாகவும் அவனது ஆவி இன்றும் தலை இல்லாமல் இப்போதும் அங்கே சுற்றுவதாகவும் நம்புகின்றனர்.....












தொடரும்.....