வியாழன், 3 ஜூலை, 2014

பயணங்களின் பதிவுகள் (அந்தமான் பாகம் 3)

பாராடாங்...நாங்கள் அன்று செல்லவிருந்த தீவின் பெயர் ..அதற்கு விடியற்காலை 3.30 மணிக்கே கிளம்பி தயாராக இருக்க சொன்னார்கள் ..வண்டி வந்ததும் கிளம்பி 100 கிலோ மீட்டர் பயணம் செய்தோம்..காலை 6 மணிக்கு முன் அங்குள்ள கண்டோன்மென்ட் சென்று பதிவு செய்து வரிசையில்  காத்திருக்க வேண்டும் ,எல்லா வண்டிகளுக்கு முன்பும் பின்பும் காவல்துறையினர் வருகின்றனர் ..அதிகபட்ச  வேகம் 40 அதற்கு மேல் போக கூடாது ,நமக்கு முன் செல்லும் போலீஸ் வழியில் நிற்கும் ஆதிவாசிகளை காட்டுக்குள் அனுப்புகின்றனர்...பின் வரும் போலீசும் ஆதிவாசிகள் வருகின்றார்களா என்று கண்காணித்து கொண்டே வருகின்றனர்.. அதையும் மீறி அவர்கள் வெளியே வந்தாலும் நாம் அவர்களை புகைப்படம் எடுத்தாலோ, அவர்களுக்கு நாம் ஏதேனும் தின்பண்டங்கள் கொடுத்தாலோ  நம்மை அழைத்து செல்பவரின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்..போகும் வழி எங்கும் அடர்த்தியான மரங்கள் ,மிக அடர்ந்த காட்டின்  நடுவினில் பாதை பயணிக்கையில் மிக இனிமையாக இருக்கிறது ,பாராடாங் தீவில் இறங்கியதும் அங்கிருந்து ஒரு படகில் அழைத்து செல்கின்றனர்.அடர்ந்த மான்கூராவ் காடுகளின் வழியே படகு பயணிக்கிறது ,அடர்ந்த சிலந்தி வலையின் உள்ளே பயணிப்பது போல் அனுபவத்தை தருகிறது ,சென்று இறங்கியதும் மரபாலங்கள் மேல் சிறிது தூரம் நடந்து சென்று பின் காடுகளின் உள் வழியே  நடக்க தொடங்கினோம் ,வெகு தூரம் நடக்க வேண்டி உள்ளது போகிறவர்கள் தண்ணீர் தின்பண்டம் எடுத்து செல்வது நல்லது  ...முடிவில் லெமன் கேவ் என்னும் அரிய வகை குகை உள்ளது , தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பலகைகள் வைத்து அந்த இடத்தை பற்றி விவரங்களை விளக்கி உள்ளனர்.எலுமிச்சை மரங்களின் வழியே வேரோடிய நீர் சுண்ணாம்பு பாறைகளில் பட்டு இந்த குகைகள் உருவானதாக சொல்கின்றனர் . குகையின் உள் பல வித தோற்றங்கள் நம் கண்னுக்கு தெரிகிறது .. குகையின் பக்கங்கள் பளிங்கு போல் மின்னி பல உருவங்களை காட்டுகிறது..உள்ளே சென்றதும் வேற்று கிரகம் சென்றது போல் உள்ளது..அதனுள் சிறிது நேரத்தை செலவிட்டு பின் மண் எரிமலை சென்றோம்,அதில் சகதி எரிமலை குழம்பு போல் கொதிக்கிறது ...இந்த  தீவு அந்தமான் செல்லும் அனைவரும் சென்று பார்ப்பது இல்லை .. ...சிறிது அதிக பணம் செலுத்த வேண்டி வரும் ஆனால் இதை பார்க்காமல் வருவது அந்தமான் பயணத்தை நிறைவு செய்யாது...........




 

2 கருத்துகள்: