சனி, 11 பிப்ரவரி, 2017

வெள்ளிவிழா (october 3/2016)சிறப்பு பதிவு 12
TIME TRAVEL

2001....பையன் படிக்கும் ஆஷ்ரம் பள்ளியிலேயே ஐஷுவையும் சேர்த்தார்...விக்கி ஸ்கூல் போகணும்னாலே எப்பவும் அழுகை தான் ரொம்ப செல்லம்....ஐஷுவை முதல் நாள் பள்ளியில் சேர்க்கும் போது அழுகையை எதிர்பார்த்தே போனோம்....ஆனா அபியும் நானும் படத்தில் வர மாதிரி அவ திரும்பி கூட பார்காம போயிட்டாள்....நானும் அவரும் கண்கலங்கி திரும்பி வந்தோம்....
கல்யாணம் ஆன நாள் முதல் குடும்பத்தை இணைப்பதும் பணம் சம்பாதிப்பதும் மட்டுமே லட்சியமாக இருந்த நாங்கள் கொஞ்சம் வாழ்கையை ரசிக்கவும் ஆரம்பித்தோம்...
அம்மாக்களுக்கு பிள்ளைகள் மிக பெரிய பலம்...மனைவி வெளியில் போகணும்னு சொன்னால் மறுக்கிற கணவன் பிள்ளைகள் கேட்டதும் உடனே தலையாட்டுவார்கள்....அப்படித்தான் இவரும்...வெளியில் போவது என்றாலே இவருக்கு கசக்கும்...ஆனால் பிள்ளைகள் கேட்டதும் சினிமா பீச் என்று அவர்களுக்காக வர ஆரம்பித்தார்........தொடரும்
 — remembering someone very special with Saidai Damu.

2 கருத்துகள்:

  1. அப்ப இருந்தே சேகருக்கு கறுப்பு கலர் இஷ்டம் போல

    >>வெளியில் போவது என்றாலே இவருக்கு கசக்கும்...ஆனால் பிள்ளைகள் கேட்டதும் சினிமா பீச் என்று அவர்களுக்காக வர ஆரம்பித்தார்....

    டெம்ப்ளேட் அப்பாக்கள் குணம்

    பதிலளிநீக்கு
  2. கருப்பு தான் இஷ்டம் ஆனால் வெள்ளை தான் போடுவார்

    பதிலளிநீக்கு