சனி, 11 பிப்ரவரி, 2017

வெள்ளிவிழா சிறப்பு பதிவு 3(october 3)
TIME TRAVEL

1992 ...பாரதிராஜாவின் படத்தின் இறுதி காட்சி போல வாழ்க்கை காதலர்கள் இணைவதில் முடிவதவதில்லை... அன்றில் இருந்து தான் தொடங்குகிறது வாழ்க்கை....

இதுவரை சம்பாதிக்க அவசியபடாத ஒருவனும் இதுவரை சமையலறையை பார்த்திராத ஒருத்தியும் திருமணம் முடித்தால் வாழ்கை எப்படி இனிக்கும்...இருவருக்கும் கசப்பான அனுபவங்களும் திடீர் திருமணம் தந்த மனஉளைச்சலும் ஒருவித வெறுப்பான வாழ்வையே தந்தது...எங்க வீட்டில் எங்கள் திருமணத்தை ஏற்று கொண்டனர்...அந்த வருடம் ஜூலை மாதம் என் மகன் பிறந்தபின்பே எங்கள் வாழ்வில் பிடிப்பும் சந்தோஷமும் தொடங்கியது....ஆட்டோ ஓட்டுனராக தொடங்கிய வாழ்க்கையில் மகனின் வருகை மிக பெரிய விருப்பங்களையும் லட்சியங்களையும் சேர்த்தே கொண்டு வந்தது....மகனுகேன்றே அவர் ஆர்வமுடன் சம்பாதிக்கவும் நான் மகிழ்ச்சியுடன் சமைக்கவும் ஆரம்பித்தேன்....தொடரும்
 — remembering someone very special with Saidai Damu.

2 கருத்துகள்:

  1. >>>இதுவரை சம்பாதிக்க அவசியபடாத ஒருவனும் இதுவரை சமையலறையை பார்த்திராத ஒருத்தியும் திருமணம் முடித்தால் வாழ்கை எப்படி இனிக்கும்.

    ஒரு சிறுகதைக்கான கரு இந்த வரிகளில். அபாரம் . அதே போல் உங்க முகத்திலும் குழந்தை பிறந்த பின்புதான் ஒரு மெச்சூரிட்டியும், மகிழ்ச்சியும் தெரிது

    பதிலளிநீக்கு
  2. உண்மை தான் வாழ்க்கை மிக நிறைவா ஆனது மகன் பிறந்த பிறகு தான் ....

    பதிலளிநீக்கு