திங்கள், 20 பிப்ரவரி, 2017

வெள்ளிவிழா (october 3/2016) சிறப்பு பதிவு 16
TIME TRAVEL

2005....ட்ராவல்ஸ் பிசினஸ் கொஞ்சம் கடினமான பணி என்பது சிறிது காலத்தில் புரிந்தது....இவரது கோப குணத்திற்கு அது ஒத்துவரவில்லை....எனவே ஒரு வருடத்திற்குள்ளாகவே அதை மூடும்படி ஆயிற்று.....ரியல் எஸ்டேட் துறையும் அரசியலும் இன்று வரை தொடர்கிறது.....

கணவன் மனைவி உறவில்திருமணம் ஆன உடனே ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது என்பது இயலாத காரியம்....என் காதலில் எனக்கு திருமணம் ஆகும் போது இப்போது பிள்ளைகள் யோசிக்கிற அளவிற்கு எல்லாம் எனக்கு வாழ்கையை பற்றிய அறிவில்லை....காதல் என்றால் காதல் அவ்வளவு தான்....அதன் பின் வருகிற வாழ்வை பற்றி சிந்திக்கும் முன்னரே திருமணம் ஆகி விட்டது....திருமணம் ஆன புதிதில் இருந்தே அவருக்கு எப்படி பணம் சம்பாதிப்பது என்றும் எனக்கு புது உறவுகளின் பற்றிய சிந்தனையும் என காலம் போனது உடனே மகன் பிறந்தான் அவனை வளர்க்க வேண்டிய பொறுப்பு....அதன் பிறகு மகள் அவளுடன் கழிந்த காலங்கள்....இவர் கடையை மூடி பிள்ளைகளும் சற்று வளர்ந்த பிறகு தான் எங்களுக்குள் மிக புரிதல் உண்டாயிற்று....அவரது குணம் எப்படி என்றால்.....தொடரும்
 — remembering someone very special with Saidai Damu.

2 கருத்துகள்:

 1. >>>ட்ராவல்ஸ் பிசினஸ் கொஞ்சம் கடினமான பணி என்பது சிறிது காலத்தில் புரிந்தது....இவரது கோப குணத்திற்கு அது ஒத்துவரவில்லை..

  பொதுவா பிஸ்னெஸ்னாலே கோப குணம் ஒத்து வராது, சிரிச்ச முகம் தேவை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்...பிசினஸ் பண்ணிட்டு இருந்த வரை ரொம்ப டென்சன் ஆளு அவர் ...

   நீக்கு