சனி, 19 பிப்ரவரி, 2011

கடிகாரம்


கடை கடையாய் தேடி பார்த்தேன்
உன் கைகளில் மிளிரும் அழகான
கடிகாரம் போல் வாங்கிட ....
தேடி அலுத்து கிடைக்காமல்
சோர்ந்த போது தான் புரிந்தது
அழகு அந்த கடிகாரத்தில் இல்லை என்பதும்
உனது கைகளில் அது உள்ளதால்
தான் அது அழகு என்பதும் ......

10 கருத்துகள்:

 1. சிறியதாக இருந்தாலும் கவிதை ரசிக்கும்படி இருந்தது..

  பதிலளிநீக்கு
 2. நன்றி......நீங்கள் பார்த்தது இல்லையா சுதர்ஷன் ?

  பதிலளிநீக்கு
 3. சிந்தனை சிறப்பு .. வரிகளும் அழகு ..
  கவிதை கலக்கல் ...
  வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 4. இது உண்மைதான்.

  பதிலளிநீக்கு
 5. //உனது கைகளில் அது உள்ளதால்
  தான் அது அழகு என்பதும் ......//

  இது தேவையா தோழி? இது இல்லாமலே கவிதை புரியுமே, இன்னும் நறுக்கென்றும் இருக்குமே?
  என் கருத்து இது!

  நேர்மறையான, அழகை அழகாக்கும் கவிதை... அருமை!

  பதிலளிநீக்கு