சனி, 12 பிப்ரவரி, 2011

காதலியின் தேவை


என் மவுனங்களையும் எண்ணங்களையும்
சொல்லில் வராத வார்த்தைகளையும்
கண்களின் மொழியில் புரிந்து
கொள்ளும் இதயம் தேவை .....

ஏதேதோ எண்ணங்களில் புரண்டாலும்
கண்ணுறங்கும் வேளையில்
என்னுருவம் இமைகளில் பொருத்தி
உறங்கும் இதயம் தேவை ....

என் கண்ணோரம் துளிர்க்கும்
சிறுதுளி கண்ணீரையும்
உணர்ந்து கலங்கி தவிக்கும்
அன்பு இதயம் தேவை ....

மொத்தத்தில் என்னையும் நேசிக்கும்
இதயம் தேவையில்லை
என்னை மட்டுமே நேசிக்கும்
காதல் இதயம் தேவை .....

2 கருத்துகள்:

 1. நன்று..

  காதலர் தின வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 2. /சொல்லில் வராத வார்த்தைகளையும்/
  சொல்லும் வார்த்தையும் ஒன்றுதானே? முன்னது தமிழ், பின்னது வடமொழி! (சொல்லாட்சியில் ஆழம் அவசியம் தோழி!)

  ஆண்கள் பெண்களின் சார்பாய் எழுதும் கவிதையைப் போல்தான் இதுவும் உள்ளது, இன்னும் ஆழம் எதிர்ப்பார்த்தேன் நான்!

  பதிலளிநீக்கு