சனி, 23 ஜூலை, 2011

"படி தாண்டா பத்தினி பெண்கள் "

திரைப்பட பின்னணி பாடகியாக
பெயர் வாங்க விரும்பிய
குயில் போல் பாடும் குரல் கொண்ட
மீனா இன்று பாடுகிறாள்
அவள் வீட்டு குளியறையில்....

கதைகள் எழுதி குவித்து
பெரும் பெயர் வாங்குவேன் என்று
சூளுரைத்த கவிதாவின் கதைகள்
இன்று வெளிவராமல் கிடக்கின்றன
அவள் வீட்டு பரண் மேல் ......

ஓட்ட பந்தயத்தில் எப்பொழுதும்
முதல் பரிசு வாங்கும் பவித்ராவின் கனவு
தடகளத்தில் இந்தியாவிற்கு முதல்பெயர்
வாங்கி தருவது இன்று அவள் ஓடுகிறாள்
பிள்ளைகளின் பின்னே ....

நல்லாசிரியர் பெயர் வாங்க
கனவு கண்ட வேணி அக்கா
இன்று ஆசிரியராக இருக்கிறாள்
அவள் பிள்ளைகளுக்கு மட்டும் ....

பல துறைகளில் பெயர் வாங்க துடித்த
இவர்கள் எல்லாம் இன்று ஒரே பெயர்
வாங்கினார்கள் ....
"படி தாண்டா பத்தினி பெண்கள்" என்று .........

7 கருத்துகள்:

 1. படி தாண்டா பத்தினி பெண்கள்"க்கு இப்படி ஒரு அர்த்தம் கண்டு பிடிச்சீட்டீங்களே!.. ஆதங்கம் தெரிகிறது வரிகளில்

  பதிலளிநீக்கு
 2. ஆதங்கம் தெரிகிறது வரிகளில்

  பதிலளிநீக்கு
 3. ஆதங்கம் நிறைந்த வரிகள். . .திருமணத்திற்கு பின் பல பெண்களின் நிலைமையை அழகாய் எடுத்துச் சொல்லியிருக்கின்றீர்கள். . .

  பதிலளிநீக்கு
 4. படி தாண்டட்டும் பத்தினிகள்

  வாழ்த்துக்கள்

  விஜய்

  பதிலளிநீக்கு
 5. காலம் மாறிக் கொண்டுதான் இருக்கிறது, ஆனாலும் இந்த ஆண்கள் மாற வேண்டும் இந்த கனவுகள் சிறகடிக்க

  மாறினாலும் பொருளாதார முரண்பாடுகள்

  பதிலளிநீக்கு