செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

வெற்றிடம்....

வெற்றிடமாகவே இருக்கிறது
நீ விலகி போன பின் என் இதய அறை
உன் போலவே சிரித்தவரிடம்
உன் தெற்றுப் பல்லின் அழகில்லை 
உன் போலவே பேசியவரிடம்
உன் அறிவின் கூர்மை இல்லை 
உன்னைப் போலவே பழகியவரிடம்
உன் போல அன்பில்லை 
உன் உள்ளம் போல யாருக்கும் 
உள்ளம் வெள்ளையில்லை
நீ நேசித்ததை போல் யாருக்கும் 
என்னை நேசிக்க தெரியவில்லை 
எவ்வளவு பேர் கடந்தாலும் 
யாரும் நிரப்பவில்லை 
உன்னால் ஆன வெற்றிடத்தை ..........

11 கருத்துகள்:

 1. கவிதை மிக மிக அருமையாக உள்ளது.....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.....

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  பதிலளிநீக்கு
 2. வெற்றிட மெங்கே?
  வேறேதும் உள்ளேறா போது
  தெற்று பல்லாயினும்
  தேர்ந்த அறிவில்லை என்று
  முற்று மொதிக்கிட
  முழுமனதும் ஆக்கிரமிப் பானது
  என்றும் உன்நினைவால்
  எங்கே வெற்றிட மெங்கே?
  பதிலளிநீக்கு
 3. உங்களின் தளம் பற்றிய சிறு விளக்கம் ...
  காண :

  பதிலளிநீக்கு
 4. உங்களின் தளம் பற்றிய சிறு விளக்கம் ...
  காண :http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_14.html

  பதிலளிநீக்கு
 5. அருமை...

  வலைச்சர அறிமுக வாழ்த்துக்கள்...

  Visit : http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_14.html

  பதிலளிநீக்கு
 6. அழகிய கவிதை. . .அருமையான வரிகள். . .

  பதிலளிநீக்கு
 7. மொபைலில் படிப்பதால் உங்கள் பிளாக்கை தொடர முடியவில்லை. . .

  பதிலளிநீக்கு